அதில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. ஆனால் இந்த வசதி வெளிநாட்டினருக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது. உண்மைத்தன்மை குறித்து தெரியாமல் பலரும் ஷேர் செய்தும் வந்தனர். அது உண்மையா என பார்க்கலாம்.
முன்னதாக,2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது ரூ. 500 நோட்டுகள், ரூ. 1000 நோட்டுகளை வங்கியில் சென்று மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பலர் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை வங்கிக்கு எடுத்துச் சென்று புதிய நோட்டுகளாக மாற்றிக் கொண்டனர்.
அதன்படி, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ரிசர்வ் வங்கியின் கடிதம் போலியானது. பழைய ரூ. 500 நோட்டுகள், ரூ. 1000 நோட்டுகளை மாற்றுவதற்கான சாத்தியம் இல்லை என தெரியவந்துள்ளது. இந்தக் கடிதம் முற்றிலும் போலியானது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
வெளிநாட்டினர் தங்கள் பழைய ரூ. 500 நோட்டுகள், ரூ. 1000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு 2017ஆம் ஆண்டிலேயே முடிவடைந்துவிட்டதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மீண்டும், பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது