முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » உங்க நகை சுத்தமான கோல்டா? '916'னா என்ன தெரியுமா? தங்கம் விவரம் தெரிஞ்சுக்கோங்க.!

உங்க நகை சுத்தமான கோல்டா? '916'னா என்ன தெரியுமா? தங்கம் விவரம் தெரிஞ்சுக்கோங்க.!

மக்கள் முதலீடு செய்யும் பொருட்டு கையில் இருக்கும் காசை தங்க நகைகளை வாங்கி வைப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்ன்றனர். ஆனால் தாங்கள் வாங்க கூடிய தங்கம் எந்த அளவிற்கு தூய்மையானது என்ற கவலை பெரும்பாலானோர் மனதில் உள்ளது.

  • 16

    உங்க நகை சுத்தமான கோல்டா? '916'னா என்ன தெரியுமா? தங்கம் விவரம் தெரிஞ்சுக்கோங்க.!

    மற்றவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று நினைக்கும் மக்கள் காரணமாக நகை விற்பனையாளர்கள் மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். மக்கள் முதலீடு செய்யும் பொருட்டு கையில் இருக்கும் காசை தங்க நகைகளை வாங்கி வைப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்ன்றனர். ஆனால் தாங்கள் வாங்க கூடிய தங்கம் எந்த அளவிற்கு தூய்மையானது என்ற கவலை பெரும்பாலானோர் மனதில் உள்ளது. ஆனால் பி.ஐ.எஸ் (Bureau of Indian Standards) எனப்படும் தரக்கட்டுப்பாடு அமைப்பு சோதனை செய்து முத்திரையிடப்பட்ட ஹால்மார்க்கிங் தங்கம் விற்பனையில் இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்வோர் மற்றும் நகைகளை வாங்குவோர் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 26

    உங்க நகை சுத்தமான கோல்டா? '916'னா என்ன தெரியுமா? தங்கம் விவரம் தெரிஞ்சுக்கோங்க.!

    தங்க நாணயங்கள் மற்றும் நகைகள் வடிவில் நீங்கள் தங்கத்தை வாங்கும் போது ஏமாற்றப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த, ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை வாங்கவே பரிந்துரைக்கப்படுகிறது. இது தங்கத்தின் தூய்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் விற்பனை செய்தால் சிறந்த ரீ சேல் வால்யூவையும் பெற உதவுகிறது. பிஐஎஸ் ஹால்மார்க் தங்கம், கேடிஎம் தங்கம் மற்றும் 916 தங்கம் உள்ளிட்ட பல வார்த்தைகளை தங்கத்தை வாங்கும் நேரத்தில் பலர் கேள்விப்படுவார்கள். இந்த மூன்றுக்குமான வித்தியாசத்தை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    உங்க நகை சுத்தமான கோல்டா? '916'னா என்ன தெரியுமா? தங்கம் விவரம் தெரிஞ்சுக்கோங்க.!

    ஹால்மார்க் தங்கம் என்றால் என்ன?
    ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்தை வாங்குவது என்பது தரமான தங்க ஆபரணங்கள் வாங்க நினைப்பவர்களுக்கு தரத்தை உறுதி செய்யும் வழிகளில் ஒன்றாகும். பொதுவாக தங்க நகைகள் உருவாக்கப்படும் போது ஈசியாக உடையாமல் இருக்க ஏதேனும் உலோகம் சேர்த்து உலோகக்கலப்பு செய்யப்பட்டே தயாரிக்கப்படுகின்றன. இதனிடையே தங்கத்தின் தூய்மை மற்றும் நேர்த்திக்கான சான்றளிக்கும் செயல்முறையே ஹால்மார்க்கிங் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் வாங்க விரும்பும் தங்க நகைகள் அல்லது தங்க நாணயத்தில் BIS அடையாளம் இருப்பின் அது இந்திய தரநிலை பணியகத்தால் (BIS) நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஒத்து போகிறது என்பதை காட்டுகிறது. நுகர்வோருக்கு அவர்கள் வாங்கிய தங்கத்தின் தூய்மை குறித்து ஒரு உத்தரவாதத்தை அளிக்கிறது ஹால்மார்க்கிங். அதாவது ஹால்மார்க்கிங் செய்யப்பட்ட 18கே தங்க நகைகளை (18K gold jewellery) வாங்குகிறீர்கள் என்றால் உண்மையில் அதில் 18/24 என்ற வீதத்தில் தங்கம் இருக்கும். மீதமுள்ளவை உலோகக் கலப்பு என்று அர்த்தம்.

    MORE
    GALLERIES

  • 46

    உங்க நகை சுத்தமான கோல்டா? '916'னா என்ன தெரியுமா? தங்கம் விவரம் தெரிஞ்சுக்கோங்க.!

    ஹால்மார்க் தங்கத்தை வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நான்கு விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
    1. பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை: தங்கத்தின் தூய்மை பிஐஎஸ்-ன் உரிமம் பெற்ற லேப் ஒன்றில் சரி பார்க்கப்பட்டிருப்பத்தை குறிக்கிறது.
    2. காரட் மற்றும் நேர்த்தி தூய்மை: தங்கத்தின் துாய்மையை குறிக்கும் 3 டிஜிட் எண் (916, 750, 585)
    22K916 (91.6% தூய்மை கொண்டது)
    18K750 (75% தூய்மை கொண்டது)
    14K585 (58.5% தூய்மை கொண்டது)
    3. மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தின் சின்னம்
    4. ஹால்மார்க் செய்யப்பட்ட ஆண்டு மற்றும் நகை விற்கும் நிறுவனத்தின் லோகோ. லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த குறியீடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    உங்க நகை சுத்தமான கோல்டா? '916'னா என்ன தெரியுமா? தங்கம் விவரம் தெரிஞ்சுக்கோங்க.!

    கே.டி.எம் தங்கம் (KDM Gold) என்றால் என்ன?
    கே.டி.எம் தங்கம் என்பது ஒரு வகை தங்க உலோகம் ஆகும். இதில் 92% தங்கமும் 8% காட்மியம் என்ற உலோகமும் கலக்கப்படுகிறது. இந்த கலவை தங்கத்தில் உயர் தூய்மையை அடைய பயன்படுத்தப்பட்டது. இந்த கலவை தங்கத்தின் தூய்மையை பாதிக்கவில்லை என்றாலும் வாங்கி அணிபவர்களுக்கும், தயாரிப்பில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கும் சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. எனவே KDM Gold விற்பனைக்கு ஏற்றவை அல்ல இந்திய தர நிர்ணய கழகம் தடை செய்து விட்டது. இப்போது காட்மியத்திற்கு பதில் துத்தநாகம் மற்றும் பிற உலோகங்கள் போன்ற மேம்பட்ட சாலிடர் உலோகம் தங்கத்தில் கலக்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    உங்க நகை சுத்தமான கோல்டா? '916'னா என்ன தெரியுமா? தங்கம் விவரம் தெரிஞ்சுக்கோங்க.!

    916 தங்கம் (916 Gold) என்றால் என்ன?
    24 காரட் தங்கம் என்பதே 100% தூய தங்கமாகும். நாம் முன்னரே கூறியபடி இதை பயன்படுத்தி நகைகள் செய்தால் எளிதில் உடைந்து விடும். எனவே நகையின் ஸ்திரத்தன்மைக்காக மற்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இதில் 22 காரட் தங்கம் என்பதே 916 தங்கம் ஆகும். இதில் 91.6% தூய தங்கம் இருக்கும். இந்த 22 காரட் தூய தங்கத்துடன், 2 காரட் உலோகக் கலவை சேர்ந்துள்ளது. 19, 18, 17 என காரட் குறைய குறைய நகையில் தங்கத்தின் அளவு குறைந்து, மற்ற உலோகத்தின் அளவு அதிகமாகும். மதிப்பும் குறையும்.

    MORE
    GALLERIES