இந்த நோட்டுகளின் விளிம்பில் பல்வேறு சாய்வான கோடுகள் வரையப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு என்ன காரணம்? ரூபாயின் மதிப்பை பொறுத்து அந்த கோடுகள் மாறி இருப்பதை பலர் பார்த்திருக்க மாட்டீர்கள். பார்த்து இருந்தாலும் அதற்கு பெரிய அளவிலான காரணத்தை தெரிந்து கொள்ள நீங்கள் முயற்சி செய்திருக்க மாட்டீர்கள்? ஆனால் இந்த கோடுகள் தான் சிலருக்கு மிகவும் முக்கியமானது பலருக்கு தெரியாது.
ரூபாய் நோட்டின் விளிம்பில் அச்சிடப்பட்டுள்ள இந்த வரிகள் உண்மையில் ப்ளீட் மார்க்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இது நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்ப கூடுகிறது மற்றும் குறைகிறது. இந்த கோடுகளுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்றால் நாம் அனைவரும் ரூபாய் நோட்டை பார்த்த உடன் அவை 100, 200 அல்லது 500 ரூபாய் என்று தெரிந்து கொள்ள முடியும். ஆனால் கண்பார்வை இல்லாதவர்கள் எப்படி அதை தெரிந்து கொள்வார்கள்.
ரூபாயில் இருக்கும் இந்த கோடுகள் பார்வையற்றவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. இவற்றின் உதவியால், பார்வையற்றவர்கள், நோட்டுகளின் மதிப்பை புரிந்து கொள்கின்றனர். அதனால் அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. இந்திய ரூபாயில் இந்த வரிகள் நூறு முதல் இரண்டாயிரம் வரையிலான பணத்தில் உள்ளன. பார்வையற்றவர்கள் நோட்டின் மதிப்பை விரல்களை தேய்து பார்ப்பதன் மூலம் கண்டுபிடிக்கின்றனர்.
இந்திய பணத்தை உருவாக்கியவர்கள் பார்வையற்றவர்களின் வசதிக்காக இந்த வரிகளை உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு நோட்டுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்ப கோடுகள் இருக்கும். உதாரணமாக, நூறு ரூபாய் நோட்டை எடுத்தால், அதன் இருபுறமும் நான்கு கோடுகள் இருப்பதைக் காணலாம். இருநூறு நோட்டுகளிலும் நான்கு வரிகள் உள்ளன, ஆனால் அதனுடன் இரண்டு பூஜ்ஜியங்கள் இணைக்கப்பட்டுள்ளன.