பொதுவாக ஆயுள் காப்பீட்டின் முதன்மை நோக்கமானது தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க நேர்ந்தால், அவர்கள் இழப்பின் காரணமாக ஏற்படும் நிதி நெருக்கடிகளை சமாளித்து மன அமைதியையும் வழங்குவதே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களை நாம் தற்கொலை என்ற பெயரில் இழந்து கொண்டு வருகிறோம். இது இந்தியாவில் மட்டும் அல்ல, பல நாடுகளில் நிகழும் ஒரு துயரமான மற்றும் சிக்கலான நிகழ்வு ஆகும்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,39,000 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு தற்கொலைகளின் எண்ணிக்கையானது அதிகமாக இருப்பதால், இந்தியாவில் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் மூலம் தற்கொலையால் நிகழும் மரணங்கள் காப்பீடு செய்யப்படுகிறதா என்ற கேள்வி நம்மில் பலருக்கு வரலாம்.இதற்கு நேரடியாக ஆம், இல்லை என்று சொல்வது கடினம். ஏனெனில், இது பாலிசியின் விதிமுறைகள், தற்கொலையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மற்றும் பாலிசி வழங்கப்பட்ட மாநிலத்தின் சட்டங்கள் உட்பட பல காரணிகளை அடிப்டையாகக் கொண்டுள்ளது.
பாலிசியின் விதிமுறைகள் : இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பாலிசியில் தற்கொலையால் நிகழும் மரணம் காப்பீடு செய்யப்படுகிறதா என்பதை தீர்மானிக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான காரணி பாலிசியின் விதிமுறைகள் தான். பொதுவாக சொல்லப் போனால், ஆயுள் காப்பீட்டு பாலிசி என்பது வேறொன்றுமில்லை, பாலிசிதாரருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்களே ஆகும். பாலிசியின் விதிமுறைகளிலேயே உங்கள் பாலிசி எந்த சூழ்நிலையில் இறப்பிற்கான நன்மையை செலுத்தும் என்பது குறிப்படப்பட்டு இருக்கும்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகளில், பாலிசி வழங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்குள் நிகழும் தற்கொலைகளுக்கு கவரேஜ் அளிக்கப்படாது என்பது தெளிவுப்படுத்தப்பட்டு இருக்கும். இது தற்கொலை விலக்கு விதி என்று அழைக்கப்படுகிறது. அதோடு இது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் தனிநபர்கள் பாலிசி எடுப்பதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலக்கு காலத்திற்குள் தற்கொலை நேர்ந்தால், பாலிசியின் மூலம் உங்களுக்கு இறப்புப் பயன் கிடைக்காது. அது மட்டுமல்ல, பாலிசிதாரரால் செலுத்தப்பட்ட பிரீமியங்கள் பயனாளிக்கு பொதுவாகத் திருப்பித் தரப்படும். ஆனால், அதுவே விலக்கு காலத்திற்குப் பின் தற்கொலை நிகழ்ந்தால், அப்பொழுது பாலிசியில் குறிப்பிட்டுள்ளபடி இறப்புப் பயன் வழங்கப்படும்.அதே சமயம், போதைப்பொருள் அளவுக்கதிகமான அளவில் உட்கொண்டு இறத்தல் அல்லது கார் விபத்துக்கள் போன்ற தற்செயலான காரணங்களால் இறத்தல் போன்றவை தற்கொலை விலக்கு விதிக்கு பொருந்தாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலைகளில், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இறப்புப் பயன் வழங்கப்படும்.
தற்கொலைக்கான காரணம் அல்லது சூழல் : இதற்கான மற்றொரு காரணி தற்கொலைக்கான காரணம் அல்லது சூழல் ஆகும். உதாரணத்திற்கு,பாலிசிதாரர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி அல்லது குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டு இருந்தால், பாலிசிதாரரின் மனநிலை சரியில்லாததால், இறப்பு பலனைத் தர இயலாது என்று காப்பீட்டு நிறுவனம் வாதம் வைக்கலாம்.அதே போல், பாலிசிதாரர் கொள்ளை அல்லது தீ வைப்பு போன்ற ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டு அதன் விளைவாக தற்கொலை செய்து கொண்டு இருந்தால், பாலிசிதாரர் சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வந்தாகவும், அதன் காரணமாக இறப்புப் பலனைத் தர இயலாது என்றும் காப்பீட்டு நிறுவனம் வாதம் வைக்கலாம்.
இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால், பாலிசிதாரர் ராணுவத்தில் பணிபுரியும் போது அல்லது ஸ்கை டிவிங் அல்லது ஸ்கூபா டைவிங் போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபடும் போது ஏற்படும் தற்கொலைகளுக்கான கவரேஜை இந்தியாவில் உள்ள சில பாலிசிகள் விலக்கக்கூடும் என்பதே ஆகும். இத்தகைய சூழலில் இருக்கும் பாலிசிதாரர் தற்கொலை செய்து கொண்டால், பாலிசிதாரரின் சொந்த செயல்களின் விளைவின் காரணமாகவே இறப்பு நேர்ந்துள்ளது என்று காப்பீட்டு நிறுவனம் வாதிடலாம். இறுதியில், இது போன்ற சூழ்நிலைகளில் இறப்புப் பயன் கொடுக்கப்படாமல் போகலாம்.
அந்தந்த மாநிலங்களில் நிலவும் விதிகள் : இறுதியாக, ஆயுள் காப்பீட்டு பாலிசி வழங்கப்பட்ட மாநிலத்தில் நடைமுறையில் உள்ள சட்டங்களும் கூட, இந்தியாவில் தற்கொலையால் நிகழும் மரணமானது ஆயுள் காப்பீட்டு பாலிசியால் பாதுகாக்கப்படுகிறதா என்பதில் தாக்கம் கொண்டிருக்கலாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் தற்கொலை விலக்கு விதிகள் தொடர்பாக வெவ்வேறு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம்.
நீங்கள் எந்த மாநிலத்தில் பாலிசியை வாங்குகிறீர்கள் என்பதன் அடிப்படையில் அந்த மாநிலத்தின் குறிப்பிட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் புரிந்து கொள்ள ஒரு அனுபவம் வாய்ந்த காப்பீட்டு வழங்குநர் அல்லது ஆலோசகருடன் நீங்கள் கலந்தாலோசிப்பது அவசியமாகும். எனவே, தற்கொலை செய்து கொள்வதன் காரணமாக நிகழும் மரணங்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளால் பாதுகாக்கப்படுமா என்ற தலைப்பு சற்று சிக்கலானது தான் என்று சொல்ல வேண்டும்.அதோடு இது பெரும்பாலும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியும் வித்தியாசமானது என்பதையும், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒரு பாலிசியிலிருந்து மற்றொரு பாலிசிக்கு கணிசமாக மாறுபடும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது
நீங்கள் எடுக்கப்போகும் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்றாகக் படித்துப் பார்த்து, உங்களுக்கு அது குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், ஒரு அனுபவம் வாய்ந்த காப்பீட்டு வழங்குநர் அல்லது ஆலோசகருடன் கலந்தாலோசிப்பது நல்லது. இதனை எல்லாம் நினைவில் கொண்டு நீங்கள் சரியான ஒரு பாலிசியை தேர்வு செய்தால், நீங்கள் கண்டிப்பாக பலனடையலாம்.