முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

டெபிட், கிரெடிட் கார்டு முறைகேடுகளை தடுக்க டோக்கனைசேஷன் என்பதை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

  • 19

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    இன்றைக்கு டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வது ஒருபுறம் வளர்ந்துவரும் அதே வேளையில் இதன் மூலம் பல மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தான் “ டோக்கனைசேஷன்“ என்ற புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    வீட்டிற்குத் தேவையான பொருள்கள், எலக்ட்ரிக் சாதனங்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தேவையான ஆடைகள் என நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்துப் பொருள்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. கடைகளில் சென்று வாங்கினால் கூட எது இருக்கிறதோ? அதை மட்டும் தான் வாங்க முடியும். ஆனால் ஆன்லைனில் பல்லாயிரக்கணக்கானப் பொருள்களை நம்முடைய ஸ்மாரட்போனிலே பார்த்து வாங்கக்கூடிய வசதிகள் உள்ளதால் மக்கள் விரும்பும் ஷாப்பிங் ஆக மாறிவிட்டது.

    MORE
    GALLERIES

  • 39

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    நமக்கு பிடித்தமான பொருள்களை வாங்கிய பின்னர் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் போது, நம்முடைய கார்டு எண், சிவிவி நம்பர், கார்டு காலவதி தேதியை உள்ளீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பல முறைகேடுகளும், மோசடிகளும் நடைபெறுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.

    MORE
    GALLERIES

  • 49

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    இந்நிலையில் தான் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது, இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக தான் ரிசர்வ் வங்கி டோக்கனைசேஷன் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தியது. முதலில் டோக்கனைசேஷன் என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது? பாதுகாப்பானதா? என அறிந்துக் கொள்வோம்.

    MORE
    GALLERIES

  • 59

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது நிச்சயம் நம்முடைய கார்டு விபரங்களை உள்ளீடு செய்யும் போது ஆன்லைன் வணிக தளங்கள் அதை சேமித்து வைக்கும்.

    MORE
    GALLERIES

  • 69

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    இதனால் பல முறைகேடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தான் டோக்கனைசேஷன் என்பதை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 79

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது வழக்கம் போல வாடிக்கையாளர்கள் உங்களது கார்டு விபரங்களை உள்ளீடு செய்வீர்கள். இந்நிலையில் தான் டோக்கனைசேஷன் செய்யும் போது வாடிக்கையாளர்களின் உண்மையான கார்டு விவரங்களைச் சேகரிக்காமல் நம்மிடம் டோக்கனைசேஷன் நடைமுறைக்கான ஒப்புதலைக் கேட்கும். நாம் ஒப்புதல் வழங்கியவுடன் நம்முடைய கார்டு நிறுவனத்திடம் டோக்கன் கோரப்படும்.

    MORE
    GALLERIES

  • 89

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    இதில் நம்முடைய உண்மையான எவ்வித கார்டு விபரங்களையும் உள்ளீடு செய்ய முடியாது என்பதால் எவ்வித மோசடிகளும் ஏற்படாது. இந்த நடைமுறையைத் தான் வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது.

    MORE
    GALLERIES

  • 99

    அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

    ஆன்லைன் மோசடியைத் தடுக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டோக்கனைசேஷனை நுகர்வோர்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. தங்கள் கார்டுகளை டோக்கனைஸ் செய்யலாமா? வேண்டாமா? என்பதை நீங்களே தேர்வு செய்துக் கொள்ளலாம். ஒரு வேளை உங்களது கார்டை டோக்கனைசேஷன் செய்ய விரும்பவில்லை என்றால், ஒவ்வொரு ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்களது கார்டு விபரங்களை நீங்கள் உள்ளீடு செய்து ஷாப்பிங் செய்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தாலும் ஆன்லைன் மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் இனி நாமும் முயற்சி செய்துப்பார்க்கலாம்.

    MORE
    GALLERIES