நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் அச்சடிப்பதும் அவற்றை மேலாண்மை செய்வதன் பொறுப்பை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தன்வசம் வைத்துள்ளது. அதே சமயத்தில் அவற்றின் பணப்புழக்கத்தை கண்காணிக்கும் பொறுப்பானது இந்திய அரசாங்கத்திடம் உள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்கு ரிசர்வ் வங்கிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் பேங்க் மற்றும் மத்திய அரசாங்கம் ஒன்றிணைந்து ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு கணிசமான தொகையை செலவழிக்கின்றன. குறிப்பாக 2021 ஆம் ஆண்டிலிருந்து பேப்பர் மற்றும் மை ஆகியவற்றின் விலை வானளவு உயர்ந்து விட்டதால் ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவும் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஆர்பிஐ ஆனது 500 ரூபாய் நோட்டுகளை விட 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க அதிகம் செலவு செய்கிறது.
பத்து ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு ஆகும் செலவைவிட 20 ரூபாய் நோட்டுகளை அச்சடிபதற்கு ஆகும் செலவு குறைவாகும். இதைத் தவிர நாணயங்களை உற்பத்தி செய்வதற்கான செலவானது ரூபாய் நோட்டுகளை விட மிகவும் அதிகம். ஆயிரம் 20 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிடுகையில் ஆயிரம் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிவதற்கு ஆகும் செலவானது மிகவும் அதிகமாகும்.
ஆயிரம் 10 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு 960 ரூபாய் செலவாகிறது. இது 2021 மட்டும் 22 ஆம் ஆண்டிற்கான அறிக்கையாகும். இதன்படி ஒரு 10 ரூபாய் நோட்டை அச்ச்சடிப்பதற்கு 96 பைசா செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விதத்தில் ஆயிரம் 20 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு வெறும் 950 ரூபாய் மட்டுமே செலவாகிறது.
அதாவது ஒரு நோட்டை அச்சடிப்பதற்கு 95 பைசா செலவு செய்யப்படுகிறது. அதைப்போலவே ஆயிரம் 50 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு 1,330 ரூபாய் செலவாகிறது. ஆயிரம் 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு 1,770 ரூபாய் செலவு செய்யப்படுகிறது.இதில் ஆயிரம் 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு 2,370 ரூபாய் செலவாகிறது. அதே சமயத்தில் ஆயிரம் 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு 2,290 ரூபாய் மட்டுமே செலவாகிறது. இதன் காரணமாகத்தான் தற்பொழுது 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது வெகுவாக குறைந்துள்ளது என்பதை நாம் உணர முடியும்.