உக்ரைனில் இருந்து சப்ளை மீண்டும் தொடங்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. விலையும் வெகுவாக குறைந்துள்ளது என்றே கூறலாம். சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEAI) தரவுகளின்படி, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெய்யின் விலை இப்போது இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சோயாபீன்ஸ் மற்றும் பாமாயிலை விடக் குறைவாக உள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெய் விலை டன்னுக்கு 2,300 டாலர்கள். அதாவது நமது கரன்சியில் சுமார் ரூ. 1.7 லட்சம். அதன் விகிதம் கச்சா பாமாயில் மற்றும் கச்சா சோயாபீன்ஸை விட அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. சர்வதேச விலை குறைந்தாலும், சில்லறை விலை அந்த அளவிற்குக் குறையவில்லை. இதனால், விலை குறைப்பின் முழு பலனையும் நுகர்வோர் பெறவில்லை.
ஆனால், விலை குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இன்னும் சில வாரங்கள் ஆகும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், மத்திய அரசு இது தொடர்பாக முக்கிய முடிவை எடுத்துள்ளது. சர்வதேசச் சந்தை விலைக்கு ஏற்ப நாட்டில் சமையல் எண்ணெய்யின் MRP விகிதத்தைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன. இதனால் தற்போது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் சில்லறை விலை குறையலாம். பல நிறுவனங்கள் ஏற்கனவே கட்டணத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
சர்வதேசச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கச்சா பாமாயிலின் விலை 48 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் சில்லறை மற்றும் மொத்த பாமாயிலின் விலையும் 37 முதல் 38 சதவீதம் வரை குறைந்துள்ளது. பாமாயில் நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், சந்தையிலும் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதாகத் தெரிகிறது.