ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » எலான் மஸ்க் முதல் எலிசபெத் ஹோல்ம்ஸ் வரை... 2022-ல் அதிக சர்ச்சையில் சிக்கிய டாப் நிறுவன சிஇஒ

எலான் மஸ்க் முதல் எலிசபெத் ஹோல்ம்ஸ் வரை... 2022-ல் அதிக சர்ச்சையில் சிக்கிய டாப் நிறுவன சிஇஒ

Year Ender 2022: ஆஷ்னீர் க்ரோவர் பாரத்பே நிறுவனத்தில் இந்து கசப்பான மோதல்களோடு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியேறியவர். நிதி முறைகேடுகளை செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது

 • 16

  எலான் மஸ்க் முதல் எலிசபெத் ஹோல்ம்ஸ் வரை... 2022-ல் அதிக சர்ச்சையில் சிக்கிய டாப் நிறுவன சிஇஒ

  பெரும் நிறுவனங்களில் பணியாற்றிய ஊழியர்கள் பலருக்கு 2022ஆம் ஆண்டு சோதனையான காலகட்டம் என்றே குறிப்பிடலாம். டிவிட்டர் நிறுவனத்தை, டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் நீண்ட கால இழுபறிக்கு பின்னர் விலை கொடுத்து வாங்கினார்.பணிக் கலாச்சாரம் மற்றும் கொள்கை முடிவுகள் மாற்றம் என நிறைய அதிரடியான விஷயங்களை எலான் மஸ்க் மேற்கொண்டார். இவர் மட்டுமல்ல, கிரிப்டோ வர்த்தக நிறுவனமான எஃப்டிஎக்ஸ், அதன் தலைவரான சாம் பாங்க்மானின் முடிவுகளால் திணறிக் கொண்டிருந்தது. இதுபோல 2022ஆம் ஆண்டில் அணிவகுத்த சர்ச்சையான விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  எலான் மஸ்க் முதல் எலிசபெத் ஹோல்ம்ஸ் வரை... 2022-ல் அதிக சர்ச்சையில் சிக்கிய டாப் நிறுவன சிஇஒ

  எலான் மஸ்க் : டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கப் போவதாக எலான் மஸ்க் அறிவித்தபோது, உலகெங்கிலும் அவர் தான் தலைப்புச் செய்தியாக வலம் வந்தார். அதிலும், வெளியிட்ட அறிவிப்பை இடையில் பின்வாங்கி மேலும் அதிர்ச்சி அளித்தார். இறுதியாக டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், எலான் மஸ்க் அதை வாங்குவதற்கு ஒப்புக் கொண்டார்.டிவிட்டரை கையகப்படுத்திய வேகத்தில் 7,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க். அது மட்டுமல்ல, எஞ்சியுள்ள பணியாளர்களுக்கு கடும் பணி செய்யுமாறு நிர்பந்தம் அளிக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  எலான் மஸ்க் முதல் எலிசபெத் ஹோல்ம்ஸ் வரை... 2022-ல் அதிக சர்ச்சையில் சிக்கிய டாப் நிறுவன சிஇஒ

  சாம் பாங்கன் ஃபிரைடு : எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ முதலீட்டு நிறுவனமானது வாடிக்கையாளர்களின் கோடிக்காணக்கான டாலர் முதலீட்டு பணத்தை, அதன் துணை நிறுவனமான அலமேடா ஆய்வு நிறுவனத்திற்கு வாரி வழங்கியது. அந்த நிறுவனம் சவாலான காரியங்களை மேற்கொள்ளும் நிறுவனமாகும். எதிர்பார்த்ததைப் போலவே, அலமேடா நிறுவனம் சரிவுகளை சந்தித்து வரும் நிலையில், அதன் எதிரொலியாக எஃப்டிஎக்ஸ் நிறுவனமும் திணறி வருகிறது.தவறான முடிவுகளை எடுத்ததாக கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், முதன்மை செயல் அதிகாரி சாம் பாங்கன் ஃபிரைடு பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஜான் ஜே ராய் புதிய முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 46

  எலான் மஸ்க் முதல் எலிசபெத் ஹோல்ம்ஸ் வரை... 2022-ல் அதிக சர்ச்சையில் சிக்கிய டாப் நிறுவன சிஇஒ

  எலிசபெத் ஹோல்ம்ஸ் : முறைகேடு வழக்கு ஒன்றில் அமெரிக்க பயோடெக் நிறுவன அதிபர் எலிசபெத் ஹோல்ம்ஸுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு சில துளி அளவுகளில் ரத்தத்தை வைத்தால், சுய ஆய்வு இயந்திரமானது பல்வேறு சோதனை முடிவுகளை வெளியிடும் என்று செய்த விளம்பரத்தை நம்பி ஏராளமான மக்கள் அதனை வாங்கி குவித்தனர். ஆனால், சொன்னபடி இயந்திரம் வேலை செய்யவில்லை. இந்த மோசடி வழக்கில் எலிசபெத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், கர்ப்பமாக இருப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  எலான் மஸ்க் முதல் எலிசபெத் ஹோல்ம்ஸ் வரை... 2022-ல் அதிக சர்ச்சையில் சிக்கிய டாப் நிறுவன சிஇஒ

  சாந்தணு தேஷ்பாண்டே : பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான இவர், இளைஞர்கள் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியதால் அதிக விமர்சனத்திற்கு உள்ளானார். பணிச்சுமை காரணமாக ஏற்கனவே மனநலன் பாதிக்கப்படுவதாகக் கூறி வரும் நிலையில், இவரது கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய கருத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சாந்தணு அறிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 66

  எலான் மஸ்க் முதல் எலிசபெத் ஹோல்ம்ஸ் வரை... 2022-ல் அதிக சர்ச்சையில் சிக்கிய டாப் நிறுவன சிஇஒ

  ஆஷ்னீர் க்ரோவர் : பாரத்பே நிறுவனத்தில் இந்து கசப்பான மோதல்களோடு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியேறியவர். நிதி முறைகேடுகளை செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. நிறுவனத்தின் பணத்தை வைத்து இவரும், இவரது குடும்பத்தினரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  MORE
  GALLERIES