கடந்த வாரம் ஏப்ரல் 30ஆம் தேதி ஒரு சவரன் ரூ.45,040க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் விலை இந்த வாரம் ரூ.46 ஆயிரம் வரை தாண்டியது. மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து 5,710 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.45,680 ஆக விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து 4,677 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.37,416 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700 எனவும் விற்பனையாகிறது.