[caption id="attachment_961393" align="alignnone" width="1000"]க்ஷ கடந்த வாரம் ரூ.45 ஆயிரத்தை தாண்டி உச்சம் தொட்ட தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.45 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.[/caption] கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து 5,615 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.44,920 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து 4,600 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 குறைந்து ரூ.36,800 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மட்டும் ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 எனவும் விற்பனையாகிறது.