கடந்த வாரம் அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்த நிலையில் இன்றும் அதே விலையே நீடிக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் 5,630 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.45,040 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் 4,612 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.36,896 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது.