தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து 5,510 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.240 வரை குறைந்து ரூ.44,080 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.24 குறைந்து 4,514 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.192 வரை குறைந்து ரூ.36,112 ஆகவும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.75,700 எனவும் விற்பனையாகிறது.