தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,540 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.80 வரை குறைந்து ரூ.44,320 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.8குறைந்து 4,538 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.64 வரை குறைந்து ரூ.36,304 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்தமாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,000 எனவும் விற்பனையாகிறது.