தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,580 ரூபாய் எனவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து ரூ.44,640 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.1000 உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ. 74.60 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.74,600-க்கு விற்பனையாகிறது.