ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து 3வது நாட்களாக இன்றும் தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு 5,650 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் விலையிலும் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் 4,628 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ.37,024 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.1.10 காசுகள் குறைந்து ரூ.80.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 எனவும் விற்பனையாகிறது.