ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து 5,720 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.37 உயர்ந்து 4,686 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.296 வரை உயர்ந்து ரூ.37,488 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக ஒரு கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.83.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.83,000 எனவும் விற்பனையாகிறது.