ஏப்ரல் மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்தும் ஏறியும் வரும் நிலையில் தற்போது ரூ. 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று தங்கம் விலை அதிரடியாக ரூ.400 அதிகரித்த நிலையில் இன்று விலை சரிந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4 குறைந்து 5,676 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ. 32 குறைந்து ரூ.45 408 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4 குறைந்து 4,649 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.32 வரை குறைந்து ரூ.37,192 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.81.80 எனவும், ஒரு கிலோ வெள்ளி 400 ரூபாய் அதிகரித்து ரூ.81,800 எனவும் விற்பனையாகிறது.