ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.70 குறைந்து 5,650 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.58 குறைந்து 4,628 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.464 வரை குறைந்து ரூ.37,024 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக ஒரு கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.81.50 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500 எனவும் விற்பனையாகிறது.