கடந்த வாரம் அட்சயதிருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 5,642 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து ரூ.45,136 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 4,622 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.36,976 ஆகவும் விற்பனையாகிறது. ஆனால் வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது.