முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » போதைப்பொருள் விற்பனை: அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம்!

போதைப்பொருள் விற்பனை: அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம்!

 • 15

  போதைப்பொருள் விற்பனை: அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம்!

  பொதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் போன்றவற்றை விற்பதாக கூறி அமேசான் இ.காமர்ஸ்நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது.

  MORE
  GALLERIES

 • 25

  போதைப்பொருள் விற்பனை: அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம்!

  ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் கஞ்சா விற்பனை நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அமேசான் இந்தியா ஆன்லைன் விற்பனை நிறுவன நிர்வாக இயக்குநர்கள் மீது மத்தியப் பிரதேசம் பிந்த் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 35

  போதைப்பொருள் விற்பனை: அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம்!

  அமேசான் நிறுவனம் போதைப் பொருள் விற்பனையில் மட்டுமல்லாது தடை செய்யப்பட்ட ரசாயன விற்பனையில் ஈடுபடுவதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. புல்வாமா வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தபட்ட வெடிகுண்டு தயாரிப்பதற்கு 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் மூலம் வேதிரசாயணப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

  MORE
  GALLERIES

 • 45

  போதைப்பொருள் விற்பனை: அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம்!

  இந்நிலையில், அமேசான் நிறுவனத்தை கண்டித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது. நாடு முழுவதும் 500 மாவட்டங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 55

  போதைப்பொருள் விற்பனை: அமேசான் நிறுவனத்துக்கு எதிராக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு நாடு தழுவிய போராட்டம்!

  போதைப் பொருட்கள் விற்பனை ஈடுபட்டதற்காகவும், புல்வாமா தாக்குதலில் உபயோகிக்கப்பட்ட வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ரசானயங்களை விற்பனை செய்ததற்காகவும் அமேசான் நிறுவனத்தை கண்டித்தும் ஜவளி மற்றும் காலணிகளுக்கான  விலையை உயர்த்தியதற்காக ஜிஎஸ்டி கவுன்சிலை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES