மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஏற்கனவே இருக்கும் சில சேமிப்பு திட்டங்களில் முக்கியமான மாற்றங்களுடன், பட்ஜெட் 2023-ல் பெண்களுக்கான 'மகிளா சம்மான் சேவிங் சர்டிபிஃகேட்' (Mahila Samman Saving Certificate) என்ற புதிய சிறு சேமிப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.
மகிளா சம்மான் சேவிங் சர்டிபிஃகேட் மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா இடையே உள்ள வேறுபாடு : சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக சிறு டெபாசிட் திட்டமாகும். இந்த திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் வகையில் உள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆகும். 10 வயது வரையிலான பெண் குழந்தைகளின் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.
மகிளா சம்மான் சேவிங் சர்டிபிஃகேட் திட்டம் என்றால் என்ன? மகிளா சம்மான் சேவிங் சர்டிபிஃகேட் என்பது மத்திய அரசின் பட்ஜெட் 2023-ல் அறிவிக்கப்பட்ட ஒரு முறை முதலீடு செய்ய கூடிய புதிய சிறு சேமிப்பு திட்டமாகும். பட்ஜெட் தாக்கலின்போது இந்த திட்டத்தை அறிவித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், மார்ச் 2025 வரையிலான 2 ஆண்டுகளுக்கு மகிளா சம்மான் சேவிங் சர்டிபிஃகேட் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
வட்டி விகிதம் : இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயரில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். 2 வருட காலத்திற்கு 7.5% நிலையான வட்டி விகிதத்தில் பகுதியளவு திரும்ப பெறும் (partial withdrawal) ஆப்ஷனுடன் வருகிறது. இது பெரும்பாலான பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற பிற பிரபல முதலீட்டுத் திட்டங்கள் வழங்கும் வட்டி விகிதத்தை விட அதிகமாகும். ஒரு பெண்ணின் பெயரில் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யப்படும் நிலையான வைப்புகளுக்கு (FDs) பொருத்தமான மாற்றாக மகிளா சம்மான் சேவிங் சர்டிபிஃகேட் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நிதியாண்டில் ஒரு அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யப்படும் மொத்த தொகை ரூ.1,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கு செக்ஷன் 80C-ன் கீழ் வரி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த அக்கவுண்ட் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் மெச்சூரிட்டி அடையும். அக்கவுண்ட் வைத்திருப்பவர் 18 வயது அல்லது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால், கல்வி நோக்கத்திற்காக அதிகப்பட்சம் 50% வரை திரும்ப பெற அனுமதிக்கப்படுகிறது. இதற்கிடையே மகிளா சம்மன் சேவிங் சர்டிபிஃகேட் திட்டத்தின் Taxation ஸ்ட்ரக்ட்சர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மூத்த குடிமக்கள் சார்ந்த திட்டங்கள் மற்றும் மாதாந்திர டெபாசிட் திட்டங்களுக்கான டெபாசிட் லிமிட்டை உயர்த்துவதாக பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் அறிவித்தார். இதன்படி மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான அதிகப்பட்ச டெபாசிட் லிமிட் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல மாதாந்திர வருமான கணக்கு திட்டத்திற்கான அதிகப்பட்ச டெபாசிட் வரம்பு சிங்கிள் அக்கவுண்டிற்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.9 லட்சமாகவும், ஜாயிண்ட் அக்கவுண்டிற்கான டெபாசிட் லிமிட் ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. HelpAge India-வை சேர்ந்த அனுபமா தத்தா பேசுகையில், வயதான பெண்களுக்கும் Mahila Samman Saving Certificate திட்டத்தின் பலன் கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.