முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

ஆண்டுதோறும் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் மாதித்ய பட்ஜெட் வெளியிடப்படுகிறது. அதன் வரலாறுகளின் பக்கங்கள் இதோ...

 • 112

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இதுவே தற்போதைய அரசாங்கத்தின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்த சில சுவாரசிய தகவல்கள் இதோ.

  MORE
  GALLERIES

 • 212

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  சுதந்திர இந்தியாவின் முதல் யூனியன் பட்ஜெட்டை நவம்பர் 26, 1947 அன்று அன்றைய நிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.

  MORE
  GALLERIES

 • 312

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  சுதந்திரத்திற்கு முன் ஆட்சியின் கீழ் இருந்த இந்திய பகுதிக்கான முதல் பட்ஜெட் ஏப்ரல் 7, 1860 அன்று ஜேம்ஸ் வில்சனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 412

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  இந்தியாவின் எண்ணிக்கையிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் மொரார்ஜி தேசாய். தனது பதவி காலத்தில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 512

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  பல ஆண்டுகளாக பொது பட்ஜெட் , ரயில்வே பட்ஜெட் என்று தனி தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 2017ல் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 612

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  பிரதமர்கள் நிதி அமைச்சர்களாக இருந்து பட்ஜெட்டை வெளியிடுவது அரிதான நிகழ்வு. ஆனால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்களாக உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 712

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  1999 வரை, மத்திய பட்ஜெட் பிப்ரவரி கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்டது. முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ​​பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரத்தை காலை 11 மணியாக மாற்றினார்.

  MORE
  GALLERIES

 • 812

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  2016 ஆம் ஆண்டு வரை மத்திய பட்ஜெட் என்பது பிப்ரவரி கடைசி வேலை நாலில் தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 2017-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் தேதியை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ‘பிப்ரவரி 1' க்கு மாற்றினார்.

  MORE
  GALLERIES

 • 912

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  இதுவரை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுகளில் மிக அதிகமான வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் உரை நிகழ்த்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான். 1991 இல் சுமார் 18,650 வார்த்தைகள் கொண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1012

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  அதே போல கால அளவில் மிக நீண்ட பட்ஜெட் உரையை 2020 ஆம் ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்த்தினார். அப்போது அவர் 2.42 மணி நேரம் உரையாற்றினார்.

  MORE
  GALLERIES

 • 1112

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  1950 வரை ராஷ்டிரபதி பவனில் பட்ஜெட் அச்சிடப்பட்டது. 1950 ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட் கசிந்தது. அதன் பிறகு, பட்ஜெட் புது தில்லியில் உள்ள மின்டோ சாலையில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்பட்டு வருகிறது. 1980 இல், நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் ஒரு அரசாங்க அச்சகத்தை அமைத்தது.

  MORE
  GALLERIES

 • 1212

  பட்ஜெட் 2023: மத்திய பட்ஜெட் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

  இந்தியாவில் அப்போது நிலவிய கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக
  பிப்ரவரி 1, 2021 அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  MORE
  GALLERIES