சரி, இந்த யோசனைக்கு எந்த சேமிப்புத் திட்டம் சரியாக அமையும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? உங்களுக்கான சிறந்த தேர்வாக, கிராமப்புற அஞ்சல் நிலைய காப்பீடு திட்டம் அமையும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது உங்களுக்கு சேமிப்புக்கான உத்தரவாதம் தருவதோடு மட்டுமல்லாமல், வாழ்க்கை காப்பீடு உறுதியும் தருகிறது.
யாரெல்லாம் திட்டத்தில் சேரலாம்? : 19 வயது முதல் 45 வயது வரையிலான எந்தவொரு இந்தியரும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். காப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் உத்தரவாதம் உண்டு. ஒருவேளையில் பாலிசிதாரர் இடைபட்ட காலத்தில் உயிரிழக்கும் பட்சத்தில், அவரது குடும்பத்தினருக்கு இந்தக் காப்பீட்டு தொகை மற்றும் போனஸ் தொகை சென்று சேரும்.
மெச்சூரிட்டி காலம்: அஞ்சல் நிலைய காப்பீடு திட்டத்தில், இரண்டு வகையான மெச்சூரிட்டி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது 15 ஆண்டு முதிர்வு காலம் மற்றும் 20 ஆண்டு முதிர்வு காலம் ஆகியவற்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 15 ஆண்டுகால முதிர்வு காலத்தை தேர்வு செய்யும்பட்சத்தில், பாலிசியின் 6, 9 மற்றும் 12ஆவது ஆண்டுகளில் உங்களுக்கு 20 சதவீத தொகை மணிபேக் அடிப்படையில் வழங்கப்படும்.
உங்களுக்கு 8, 12 மற்றும் 16ஆவது மாதங்களில் மணிபேக் தொகையாக தலா ரூ.1.4 லட்சம் என்ற வகையில் மொத்தம் ரூ.4.2 லட்சம் கிடைக்கும். 20ஆம் ஆண்டு பாலிசி முதிர்வு காலத்தில் ரூ.2.8 லட்சம் கிடைக்கும். இதுமட்டுமன்றி இடைப்பட்ட காலத்தில் சேர்ந்த போனஸ் தொகையானது முதிர்வு காலத்தில் ரூ.6.72 லட்சமாக கிடைக்கும். ஆக மொத்தம், உங்களுக்கு கிடைக்கக் கூடிய மொத்த தொகை ரூ.13.72 லட்சமாக இருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான பண வரவை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.