கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து அறிவித்த ரெப்போ ரேட் மாற்றங்களை தொடர்ந்து பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி தொகை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. அண்மையில் ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி 35 பாயிண்ட் அடிப்படையில் அதிகரித்தது. டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், 5.9 சதவீதமாக இருந்த ரெப்போ ரேட் விகிதத்தை 6.25 சதவீதமாக உயர்த்தும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி : 444 நாட்களை முதிர்வு காலமாக கொண்ட பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 45 பாயிண்ட் அடிப்படையில் வட்டி விகிதத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகரித்துள்ளது. எனினும், மற்ற முதிர்வு நாட்களை கொண்ட பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் 444 நாட்களை கொண்ட திட்டத்துக்கு அதிகபட்சமாக 7 சதவீத வட்டித் தொகை வழங்கப்படுகிறது.
யூகோ வங்கி : 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்தை கொண்ட பல்வேறு திட்டங்களுக்கு யூகோ வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதாவது 50 பாயிண்ட் அடிப்படை வரையில் வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 முதல் 9 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட திட்டங்களுக்கு யூகோ வங்கி 2.90 சதவீத வட்டி வழங்குகிறது. அதேபோல 30 முதல் 45 நாட்கள் முதிர்வு கொண்ட திட்டங்களுக்கு 3 சதவீத வட்டி யூகோ வங்கியில் வழங்கப்படுகிறது. 46 முதல் 120 நாட்கள் வரையிலான பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 4 சதவீத வட்டியும், 121 நாட்கள் முதல் 150 நாட்களை கொண்ட பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 4.50 சதவீத வட்டியும் யூகோ வங்கியில் வழங்கப்படுகிறது.
ஃபேங்க் ஆஃப் இந்தியா : 444 நாட்கள் மற்றும் ரூ.2 கோடிக்கும் குறைவான சிறப்பு பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஃபேங்க் ஆஃப் இந்தியா உயர்த்தியுள்ளது. வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 7.05 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை பாயிண்ட்கள் அடிப்படையிலும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான அனைத்து பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 3 முதல் 6.75 சதவீதம் வரையில் வட்டி அளிக்கப்படுகிறது.