இப்போது ஒரு வங்கி கணக்கை நாம் PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY போன்றவற்றில் இணைத்து, பயன்படுத்துகிறோம். அப்படி, ஆறு மாத காலத்திற்கு ஒருவர் 90 முறை மட்டுமே, இலவசமாக PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY போன்றவற்றில் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பயன்படுத்தினால், சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
அப்படி கணக்கிடும் போது, நீங்கள், 6 மாதத்தில் 90 முறைக்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தி இருந்தால், 91வது முறையில் இருந்து, கட்டணமாக, 2.25+ஜிஎஸ்டி வரி பிடிக்கிறார்கள். இது எல்லா வங்கிகளிலும் கிடையாது.. உங்கள் வங்கி இந்த portfolio charges வசூலிக்கிறார்களா என்பதை உறுதி செய்து நீங்கள் இந்த வரியை செலுத்த வேண்டுமா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.