பிரபல வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), FD எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. திருத்தப்பட்டுள்ள புதிய வட்டி விகிதங்கள் கடந்த மே 12 (2023) முதல் அமலுக்கு வந்துள்ளன.சீனியர் சிட்டிசன்களுக்கு வட்டியில் கூடுதலாக 50 Basis Points-களை BOB வங்கி வழங்குகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது பேங்க் ஆஃப் பரோடா FD-க்கான வட்டி விகிதங்கள் எவ்வாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் பரோடாவின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் : BOB வங்கியானது 7 முதல் 45 நாட்கள் வரையிலான முதிர்வு காலத்திற்கு 3% வட்டியை வழங்குகிறது. 46 முதல் 180 நாட்களில் முதிர்ச்சியடையும் FD-க்களில் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 4.5% வட்டி கிடைக்கும். டெர்ம் டெபாசிட் 181 முதல் 210 நாட்கள் வரை இருக்கும் பட்சத்தில் 5.25% வட்டி வழங்கப்படும். அதே போல FD-ன் முதிர்வு காலம் 211 நாட்களில் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக இருந்தால் அதற்கான வட்டி விகிதம் 5.75 சதவீதமாக இருக்கும். 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்தை கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்கள் வாடிக்கையாளர்களுக்கு 6.75% வருமானத்தை அளிக்கும்.
அதே நேரம் 395 நாட்கள் கொண்ட Special Baroda Tiranga Plus Deposit திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டியை வழங்குகிறது. BOB வாடிக்கையாளர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்குள் இருக்கும் டெர்ம் டெபாசிட்டுகளில் முதலீடு செய்தால் 7.05% வட்டியை பெறுவார்கள். 3 - 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் FD-க்களுக்கு 6.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.சரி, இப்போது சில முக்கிய வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) : FD-க்களில் வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 7.1 சதவீதம் வரை வட்டி கொடுக்கிறது SBI. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5% வட்டியை வழங்குகிறது. 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் டெர்ம் டெபாசிட்களுக்கு SBI, 6.8% வட்டி வழங்குகிறது. 3 முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் கொண்ட FD-க்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது.
ஹெச்டிஎஃப்சி பேங்க் : HDFC வங்கியானது ரூ.2 கோடிக்கும் குறைவான டெர்ம் டெபாசிட்டுகளுக்கு 3 முதல் 7.1% வரை வட்டி வழங்குகிறது. 7 நாட்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வு கால திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 0.50% கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகளுக்குள்ளான முதிர்வு காலத்தை கொண்ட FD-யில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 0.75% கூடுதல் வட்டி விகிதம் கிடைக்கும். ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்களாக இருக்கும் மூத்த குடிமக்களுக்கு இது பொருந்தாது.