பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் 4 நாட்கள் வங்கி சேவைகள் இருக்காது.
2/ 6
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார்.
3/ 6
மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்தோடு மார்ச் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந வேலை நிறுத்தம் போராட்ம் அறிவித்துள்ளனர்.
4/ 6
நாளை (மார்ச் 13) 2-வது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை மற்றும் ஞாயிறு பொது விடுமுறை. இதனால் மார்ச் 13, 14 விடுமுறை மற்றும் மார்ச் 15, 16 வேலைநிறுத்த போராட்டம் என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவை தடைப்படும்.
5/ 6
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கலந்த கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6/ 6
வங்கி சேவைகள் தொடர்ந்து 4 நாட்கள் தடைப்படுவதால் காசோலை மற்றும் பண பரிவார்த்தனையை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியாது. மேலும் ஏடிஎம் சேவையும் முடங்கும் என்று கூறப்படுகிறது.