அமேசான் நிறுவனத்தின் கோடைகால சிறப்பு விற்பனை மே 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட்ஃபோன் சாதனங்கள், மொபைல் சாதனங்கள், ஆடியோ பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர் பயன்பாட்டிற்கான எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் மளிகை பொருட்கள், ஃபேஷன் மற்றும் ஆடைகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இதர இ-காமர்ஸ் நிறுவனங்களின் கீழ் சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அமேசான் கூப்பன்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
லைட்டனிங் டீல்ஸ் ‘டீல் ஆப் தி டே’ என்ற பெயரில் ஒற்றை நாளுக்கான சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். லைட்டனிங் டீல்ஸ் என்பது சில சமயம் ஒரு சில மணி நேரங்களிலேயே முடிந்து விடும். குறிப்பிட்ட புராக்ட்க்கான பக்கத்தில் காட்டப்படும் கிளாக் அல்லது டிக்கரில் அந்த ஆஃபர் இன்னும் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.
இன்றைய நாளின் சிறப்பு சலுகை ‘டாப் டீல்ஸ் ஆப் தி டே’ அல்லது ‘டீல் ஆப் தி டே’ என்ற பெயரில் பல கேட்டகிரியில் உள்ள பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது. இது நாளுக்கு நாள் மாறுபடும். ஆகவே, பொருட்களை வாங்குவதற்கு முன்பாக இதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பிளாக்பஸ்டர் டீல்ஸ் என்ற பெயரிலும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.
பை மோர் சேவ் மோர் ஒரே சமயத்தில் பல பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை அமேசான் நிறுவனம் ஊக்குவிக்கிறது. அதாவது வாடிக்கையாளர்கள் இரண்டு பொருட்களை வாங்கும்போது 5 சதவீத தள்ளுபடியும், மூன்று பொருட்களை வாங்கும்போது 10 சதவீத தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் வங்கியில் இருந்து வழங்கப்படும் கேஷ்பேக் மற்றும் கார்ட் டிஸ்கவுண்ட் போன்ற சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.