மொபைல் ஃபோன்களுக்கு ஆஃபர் : அமேசானின் விழாக்கால சலுகை விற்பனையின்போது ஓப்போ, சியோமி, ஒன்பிளஸ், சாம்சங், ஆப்பிள், விவோ மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளை நீங்கள் ஆஃபரில் வாங்கலாம். இதற்கு முன்பு எலெக்ட்ரானிக்ஸ், ஆக்ஸசரீஸ், கேட்கட்ஸ், ஆடைகள் போன்றவற்றுக்கு அமேசான் ஆஃபர் வழங்கி வந்தது. ஸ்மார்ட் ஃபோன்கள், ஆக்ஸசரீஸ், ஸ்மார்ட் வாட்ச்கள், லேப்டாப்கள் போன்ற பொருள்களுக்கு வாடிக்கையாளர்கள் 40 சதவீதம் வரையில் தள்ளுபடி பெற முடியும்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 10% சலுகை : எஸ்பிஐ கிரெடி கார்டு மூலமாக, இஎம்ஐ அடிப்படையில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் நிறுவனம் உடனடியாக 10 சதவீத சலுகை வழங்குகிறது. பட்ஜெட் பஜார், பிளாக்பஸ்டர் டீல்ஸ், ப்ரீ புக்கிங் போன்ற பல்வேறு சலுகைகளை உள்ளடக்கியதாக விழாக்கால சிறப்பு விற்பனை அமையும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
குளிர்கால சிறப்பு விற்பனை : தற்போதைய குளிர்காலத்தை சிறப்பிக்கும் வகையில் குளிர்காலத்தில் பயன்படும் கேட்ஜெட்ஸ் பலவற்றை அமேசான் நிறுவனம் ஏற்கனவே சலுகை விலையில் விற்பனை செய்து வருகிறது. குளிரின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வாட்டர் ஹீட்டர்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
கிராம்ப்டன் சோலரியம் க்யூப் ஐஓடி கெய்சர் : இந்த வாட்டர் ஹீட்டர் 15 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இது ஸ்மார்ட் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. சுமார் 17,000 ரூபாய் மதிப்பு கொண்ட இந்த வாட்டர் ஹீட்டரை அமேசானின் தள்ளுபடி விற்பனையில் நீங்கள் 12,499 ரூபாய்க்கு வாங்கலாம். வைஃபை வசதி மற்றும் டிஜிட்டல் டெம்பரேச்சர் டிஸ்பிளே கொண்ட இந்த ஹீட்டரை வீட்டின் எந்தப் பகுதியில் இருந்தவாறும் நீங்கள் இயக்க முடியும். அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் போன்றவற்றை இந்த சாதனத்தில் பயன்படுத்தலாம்.
சன் வில் பேட்டர் ஹீட்டட் பியனி ஹட் ( un Will Battery Heated Beanie Hat) : சுமார் 7.4 வால்ட் திறனில் 2200 எம்ஏஹெச் பவர் கொண்ட ரீசார்ஜ் செய்யத் தகுந்த பேட்டரி இந்த ஹீட்டரில் இருக்கும். 4 மணி நேரத்தில் சார்ஜ் ஆக கூடிய இந்த சாதனம் 8 மணி நேரம் வேலை செய்யக் கூடியது. இந்த ஹீட்டரை சலுகை விலையில் ரூ.15,198க்கு அமேசான் நிறுவனம் விற்பனை செய்கிறது.