இந்த கண்காட்சியில் பூக்களால் ஆன டால்பின், சிட்டுக்குருவி, மைனா, மயில், பென்குயின், சிங்கம், பூக்களால் நீர் ஊற்று, யானை மற்றும் நவதானியங்களில் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஆயி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 15,000 அலங்காரத்தழை மற்றும் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
திராட்சையால் உருவாக்கப்பட்ட காளைமாடுகள், தர்பூசணியில் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி, பாரதியார், அப்துல் கலாம், அன்னை தெரசா, நரேந்திர மோடி, மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை, அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் உருவங்களும் தர்ப்பூசணியால் உருவாக்கப்பட்டிருந்தது.