மத்திய அரசின் விவசாயம் சார்ந்த திட்டங்களை பற்றி இணையதளத்தில் டைப் செய்து தேட முடியாத விவசாயிகள் கூட அந்த திட்டங்கள் பற்றி குரல் வழியாக தேடுவதற்காக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பாஷினி என்ற குழுவை அமைத்தது. பாஷினி தற்போது ChatGPTயின் தரவு மாதிரிகளைப் பயன்படுத்தி WhatsApp சாட்போட்டை சோதனை செய்து வருகிறது.