முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

37th GST Council meeting | ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை அடுத்து விலை குறையும், அதிகரிக்கும் பொருட்களின் விபரங்கள் இதோ...

 • 111

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உலர்ந்த புளி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதோடு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 211

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  கோவாவில் நடைபெற்ற 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல முக்கிய வரிக்குறைப்பு முடிவுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகம் சார்பில், 64 பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

  MORE
  GALLERIES

 • 311

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  இதன்படி, உலர்ந்த புளிக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவிதம் ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. வெட் கிரைண்டர்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது

  MORE
  GALLERIES

 • 411

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  தற்போது 5, 12, 18 சதவிதம் என்று மூன்று விதங்களில் வரி விதிக்கப்படும் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் சாக்கு பைகளுக்கான ஜிஎஸ்டி வரி ஒரே மாதிரியாக 12 சதவிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 511

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  இலைகளால் தயாரிக்கப்படும் பிளேட், கப் போற்றவற்றின் மீது இருந்த 5 சதவித வரி, முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.  கேட்டரிங் சேவைக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவிதத்தில் இருந்து 5 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 611

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவிதத்தில் இருந்து 28 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது, அதன் மீது 12 சதவிதம் செஸ் வரியும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 711

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  ஹோட்டல்களில், 1000 ரூபாய் வரையிலான வாடகை அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. ஆயிரம் ரூபாய் முதல் 7500 ரூபாய் வரையிலான வாடகை அறைகளுக்கு 18 சதவிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 12 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது

  MORE
  GALLERIES

 • 811

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  7500 ரூபாய்க்கு அதிகமான ஹோட்டல் அறைகளுக்கு 28 சதவிதமாக இருந்த ஜிஎஸ்டி வரி, 18 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட கார்கள் மீது விதிக்கப்பட்ட 15 சதவிதம் கூடுதல் செஸ் குறைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 911

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  13 நபர்கள் வரை செல்லக்கூடிய 1500 சிசி திறன் கொண்ட டீசல் வாகனத்தின் மீது இருந்த 15 சதவித கூடுதல் வரி 12 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 1,200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் வாகனத்தின் மீது விதிக்கப்பட்ட செஸ் 14 சதவிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது

  MORE
  GALLERIES

 • 1011

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  ரயில் பெட்டிகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவிதத்தில் இருந்து 12 சதவிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல்களுக்கான எரிபொருள் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

  MORE
  GALLERIES

 • 1111

  டீ, காபி, கிரைண்டர், புளி, ஹோட்டல் அறை...! விலை குறைபவை... விலை அதிகரிப்பவை எவை.. எவை...?

  ஜிப்புகள் மீதான வரி 18%லிருந்து 12% ஆக ஏற்கெனவே குறைக்கப்பட்டது. பாலிஷ்டு ராசிக் கற்களுக்கான ஜிஎஸ்டி 3% லிருந்து 0.25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES