முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் வரி சலுகைகளைப் பெறலாம். 80சி பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம் என்பது முக்கிய நன்மைகளில் ஒன்றாக இருக்கிறது.

 • 110

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  நம் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோர் சீனியர் சிட்டிசன்களாக அதாவது மூத்த குடிமக்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றனர். அந்த வகையில் சீனியர் சிட்டிசன்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக இருக்கிறது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme - SCSS).வயதானவர்களுக்கு ஏற்ற மிகவும் பிரபலமான வரி சேமிப்பு முதலீடுகளில் ஒன்றாக இருக்கும் திட்டமாக இருக்கிறது SCSS திட்டம்.

  MORE
  GALLERIES

 • 210

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  இந்த திட்டம் முதியோர்களுக்கு அரசாங்க ஆதரவுடன் கூடிய முதலீட்டு முறையை வழங்குகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட எவரும் SCSS திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த 5 ஆண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு சுமார் 8.2% வட்டி கிடைக்கும்.ஒரு நிலையான முதலீட்டு விகிதத்துடன் பாதுகாப்பான முதலீட்டை வழங்கும் அதேநேரம், இந்த SCSS திட்டத்தில் சில குறைகளும் உள்ளன. எனவே முதலீட்டாளர்கள் SCSS திட்டத்தை தேர்வு செய்யும் முன் இதன் அட்வான்டேஜ் மற்றும் டிஸ்அட்வான்டேஜ்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். இங்கே SCSS திட்டத்தின் சாதக, பாதகங்களை பற்றி பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 310

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  நன்மைகள்..வரி சலுகைகள்: வருமான வரி சட்டத்தின் 80C பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் வரி சலுகைகளைப் பெறலாம். 80சி பிரிவின் கீழ் முதலீட்டாளர்கள் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம் என்பது முக்கிய நன்மைகளில் ஒன்றாக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 410

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  முதலீடு செய்ய பாதுகாப்பானது : அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டம் என்பதால் SCSS திட்டத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கிறது. சீனியர் சிட்டிசன்களுக்கான இந்த SCSS திட்டத்தில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. SCSS திட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 510

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறலாம் : SCSS அக்கவுண்ட் தொடங்கி 1 வருடம் நிறைவுற்ற பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எடுத்து கொள்ளலாம். ஒருவேளை அக்கவுண்ட் துவங்கிய ஓராண்டுக்குள் அதை மூடும் முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் முதலீட்டு பணத்திற்கு வட்டி எதுவும் கொடுக்கப்படாது. முதலீடு செய்த அசல் தொகை மட்டுமே திருப்பி தரப்படும்

  MORE
  GALLERIES

 • 610

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  கணக்குகளை ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம் : முதலீட்டாளர் தான் SCSS அக்கவுண்ட் தொடங்கிய பகுதியில் இருந்து நாட்டின் வேறொரு பகுதிக்கு மாறினால் கவலை கொள்ள தேவையில்லை. ஏனென்றால் SCSS அக்கவுன்ட்டை-ஐ அவர்கள் புதிதாக செல்லும் இடத்திற்கு அருகில் உள்ள வங்கி/அஞ்சல் அலுவலக கிளைக்கு எளிதாக ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 710

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  பாதகங்கள்..கோரப்படாத வட்டி வருமானத்திற்கு (unclaimed interest income) வட்டி கிடையாது : மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி வழங்கப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு காலாண்டிலும் கிடைக்க வேண்டிய வட்டியை SCSS அக்கவுன்ட் ஹோல்டர் உரிமை கோரவில்லை (Claim) என்றால், முதலீட்டு பணத்தின் மீதான கூடுதல் வட்டி கிடைக்காது.

  MORE
  GALLERIES

 • 810

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  டிடிஎஸ் (TDS) : ஒரு நிதியாண்டில் SCSS அக்கவுன்ட் ஹோல்டருக்கு வழங்கப்படும் accrued interest வரம்பானது ரூ.50,000 என்ற லிமிட்டை தாண்டினால் அது TDS-க்கு உட்பட்டது. TDS கணக்கிடப்பட்டு திரட்டப்பட்ட வட்டியில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு குறைக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 910

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  நிலையான வட்டி வீதம் : SCSS திட்டத்தில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டதாக உள்ளது. குறைவான வட்டி விகிதம் இருக்கும் போது SCSS அக்கவுன்ட் ஓபன் செய்த ஒருவர், அரசு புதிய வட்டி வீதத்தை உயர்த்தி அறிவிக்கும் போது புதிய விகிதங்களில் வட்டியை பெற முடியாது. பழைய வட்டி வீதமே கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 1010

  மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் (SCSS) நன்மைகள் இங்கே..!

  வயது வரம்பு : 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்து பலன்களைப் பெற முடியும். தவிர 50 முதல் 60 வயதுக்குட்பட்ட Defence employees அல்லது 55 முதல் 60 வயது வரை உள்ள civilian employees இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். 30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள், இத்திட்டத்தில் பலன் பெற விரும்பினால் அது முடியாது. மொத்தத்தில் SCSS மூத்த குடிமக்களுக்கான ஒரு நல்ல திட்டமாகும்.

  MORE
  GALLERIES