முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

குறைவான ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி அதிக மின்சாரத்தை பயன்படுத்தும், எனவே உங்களுக்கு மின் கட்டணம் அதிகமாக இருக்கும்.

  • 18

    ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

    ஃபிப்ரவரி மாதம் வரை குளிர்காலம் இருந்தாலும், மே மாதம், ஜூன் மாதங்களில் அடிக்கும் வெயிலில் மார்ச் மாதமே தொடங்கிவிட்டது. மேலும் இந்த ஆண்டு இதுவரை காணாத அளவுக்கு அதிகப்படியான வெப்பம் நிலவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஏர் கண்டிஷனர் என்பது தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக மாறிவிட்டது. புதிதாக ஆறு கண்டிஷனர் வாங்குபவர்கள் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 28

    ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

    ஏசியில் ஏகப்பட்ட வகைகள், மாடல்கள், என்று பல விதமான வேறுபாடுகள் இருக்கின்றன. நீங்கள் எந்த இடத்தில் ஏசி பொருத்த போகிறீர்கள், அறையின் அளவு சிறியதா பெரியதா என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு ஏசியை வாங்க வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 38

    ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

    உங்கள் பட்ஜெட் எவ்வளவு : வீட்டுக்கு தேவைப்படும் எந்த சாதனமாக இருந்தாலுமே அதற்கு நீங்கள் ஒரு பட்ஜெட்டை முடிவு செய்து வைத்திருப்பீர்கள். எனவே நீங்கள் ஏசி வாங்குவதற்கு எவ்வளவு தொகையை செலவு செய்ய தயாராக இருக்கிறீர்கள் என்று உங்களுடைய பட்ஜெட்டில் நிர்ணயம் செய்ய வேண்டும். அடிப்படையாக, நல்ல தரமான ஏர் கண்டிஷனர் 30,000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. எனவே உங்களால் ஏசிக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும், எவ்வளவு ஒதுக்க முடியும் என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்றார் போல சாதனத்தை தேர்வு செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 48

    ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

    ஆன்லைனில் விலை எவ்வளவு என்று பாருங்கள்  : நீங்கள் கடைகளில் அல்லது ஷோரூம்களில் ஏசி வாங்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்தால், நீங்கள் தேர்வு செய்யும் மாடலின் விலை ஆன்லைனில் எவ்வளவு என்பதை பாருங்கள். பொதுவாகவே ஆன்லைனில் குறிப்பிட்ட சில மாடல்களின் விலை கடைகளில் விற்பதை விட குறைவாக இருக்கும். எனவே ஆன்லைனில் இருக்கும் விலையை காண்பித்து அதே விலையை அல்லது அதை விடக் குறைவாக ஷோ ரூமிலிருந்து ஏசியை வாங்கிக்கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

    ஏசி பொருத்தும் அறையின் அளவு  : ஏசி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிகமிக முக்கியமான விஷயம், அறையின் அளவு. நீங்கள் எந்த இடத்தில் ஏசி பொருத்த போகிறீர்கள், அது எவ்வளவு பெரியது அல்லது சிறியது என்பதற்கு ஏற்ற வகையில் ஏசியை தேர்வு செய்ய வேண்டும்.உதாரணமாக நீங்கள் வரவேற்பறை அதாவது ஹாலில் ஏசி பொருத்த வேண்டும் என்றால் அதற்கு 1 டன் ஏசி போதாது. குறைந்தபட்சம் 2 டன் ஏசி தேவைப்படும். அதேபோல மிக சிறிய அறை எனும் பட்சத்தில் 1.5 டன் அல்லது 2 டன் ஏசி என்பது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். 100 – 120 சதுர அடி இருக்கும் அறைக்கு ஒரு 1 ஏசி போதும். அதை விட பெரிய அறையாக இருந்தால் ஒன்றரை அல்லது 2 டன் ஏசி தேவைப்படும்.

    MORE
    GALLERIES

  • 68

    ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

    உங்கள் வசிப்பிடம் – வீடு / அப்பார்ட்மென்ட்  : வீட்டில் எந்த இடத்தில் ஏசி பொருத்த போகிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல நீங்கள் எந்த மாதிரியான கட்டிடத்தில் வசிக்கிறீர்கள் என்பது முக்கியம். உதாரணமாக, நீங்கள் ஒரு அப்பார்ட்மென்டில் வசித்தால் நீங்கள் எந்த மாடியில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து ஏசி கொள்ளளவு மாறுபடும்.சாதாரணமான, தனி வீட்டில் இருந்தால் குறைவான டன் கெப்பாசிட்டி கொண்ட ஏசி போதும். இதுவே நீங்கள் பல மாடிகள் இருக்கும் அப்பார்ட்மென்டில் நீங்கள் டாப் ஃபுளோர் அல்லது மேல் மாடிகளில் இருக்கும் பொழுது, அங்கே வெப்பம் அதிகமாக இருக்கும். உங்களுக்கு அறை சிறியதாக இருந்தாலும் நீங்கள் பெரிய, அதிக கொள்ளளவு கொண்ட ஏசியில் நீங்கள் செய்ய வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 78

    ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

    பவர் ரேட்டிங்  : குறைவான ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசி அதிக மின்சாரத்தை பயன்படுத்தும், எனவே உங்களுக்கு மின் கட்டணம் அதிகமாக இருக்கும். எனவே, அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசியை வாங்கினால் மின் கட்டணத்தை சேமிக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 88

    ஏசி வாங்கப் போறீங்களா..? இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க.. AC டிப்ஸ் இதோ!

    ஏசி சர்வீஸ்  : ஏசி வாங்குவது என்பது நீண்ட கால முதலீடு. ஆனால் அவ்வப்போது அதற்கான பராமரிப்பும் மிகவும் முக்கியம். குறைந்த பட்சம் 3 – 6 மாதங்களுக்கு ஒரு முறை ஏசியை முழுதாக சர்வீஸ் செய்ய வேண்டும். எனவே நீங்கள் வாங்கும் பிராண்டுக்கான சர்வீஸ் உங்கள் பகுதியில் கிடைக்கிறதா, ஏதேனும் பழுது என்றால் உடனடியாக சேவை கிடைக்குமா என்பதை பற்றி எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES