வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். வரும் 31ம் தேதிக்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என வருமானத்துறை அறிவுறுத்தியுள்ளது. 1.4.2023 முதல், இணைக்கப்படாத PAN எண் செயலிழக்கும் என உறுதியாக தெரிவித்துள்ளது. பான் கார்டு செயல் இழந்தால் அதை இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் முடங்க வாய்ப்புள்ளது.
அசாம், மேகாலயா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வசிப்பவர்களும் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க அவசியமில்லை. அந்தந்த மாநிலங்களில் உள்ள சிறப்பு நிபந்தனைகள் காரணமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.தனிநபர் அல்லாத நிறுவனங்கள், அதாவது நிறுவனங்கள், அறக்கட்டளைகள் பான் ஆதார் அட்டை இணைப்பு தேவையில்லை. ஆனா தனிநபர்கள் கண்டிப்பாக பான் ஆதாரை இணைக்க வேண்டும்.
பான் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே பலமுறை நீட்டித்துள்ளது. மேலும் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் காலக்கெடுவும் சமீபத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது.பான் ஆதார் காலக்கெடுவும் நீட்டிக்கப்படலாம் என சிலர் கணித்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.