அதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 2021 ஆகஸ்ட் 1-ம் தேதி துவங்கி வரும் 2023 ஆண்டு மார்ச் 3-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.