இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட அனைத்து சேவைகளையும் பெற ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைப்பது என்பது கட்டாயமாக உள்ளது. ஆதார் எண்ணில் மொபைல் எண்ணை இணைப்பது மிக எளிதான ஒன்றுதான். அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரா மையங்களுக்குச் சென்று இணைக்க முடியும். ஆதாரில் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் அனைத்து திருத்தங்களுக்கும் மொபைல் எண் இணைக்கப்பட்டால் மட்டுமே செய்யமுடியும் என்ற நிலை உள்ளது.
மேலும் உங்கள் ஆதார் அட்டையில் சில திருத்தங்களை வாடிக்கையாளர்களே ஆன்லைனில் செய்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ள நிலையில், சில திருத்தங்கள் ஆதார் மையத்திற்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அப்படி ஆதார் மையத்திற்குச் செல்லும் நேரத்தில் ஒரு சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.