ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » போஸ்ட் ஆபிஸ் கிளை முதல் எஸ்பிஐ ஏடிஎம் வரை... குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் சுய வேலைவாய்ப்புகள்..!

போஸ்ட் ஆபிஸ் கிளை முதல் எஸ்பிஐ ஏடிஎம் வரை... குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் சுய வேலைவாய்ப்புகள்..!

எஸ்பிஐ ஏடிஎம் கிளை நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு நீங்கள் பாதுகாப்பு அமைப்புத் தொகையாக 2 லட்சம் செலுத்த வேண்டி இருக்கும். அதன் பிறகு 3 லட்சம் வரை முதலீடு செய்த பிறகு உங்களுக்கான அனுமதி அளிக்கப்படும்.

 • 16

  போஸ்ட் ஆபிஸ் கிளை முதல் எஸ்பிஐ ஏடிஎம் வரை... குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் சுய வேலைவாய்ப்புகள்..!

  வேலைவாய்ப்புகள் மிக கணிசமாக குறைந்து வரும் இன்றைய நிலையில் தங்களுக்கான சரியான வேலை மற்றும் தொழிலை தேடுவதில் பலர் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். மேலும் சுயமாக தொழில் செய்ய விரும்புபவர்கள் பலரும் எந்த விதமான தொழிலில் ஈடுபடுவது என்பதை பற்றிய குழப்பங்களை கொண்டுள்ளனர். ஆனால் நீங்கள் மிக சிறிய அளவிலான முதலீட்டில் மிக அதிக லாபம் பார்க்கும் படியான சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதாவது நீங்களே ஒரு சிறிய அலுவலகத்தை துவங்கி, அங்கு ஏற்கனவே பிரபலமாக உள்ள தொழில் நிறுவனத்தின் கிளைகளை ஆரம்பித்து பணம் ஈட்ட முடியும். எவ்வாறு இதை செய்வது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 26

  போஸ்ட் ஆபிஸ் கிளை முதல் எஸ்பிஐ ஏடிஎம் வரை... குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் சுய வேலைவாய்ப்புகள்..!

  ஆதார் அட்டை அலுவலகம் : நீங்கள் வசிக்கும் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆதார் கார்டு சேவைகளை வழங்கும் கடைகள் அல்லது அலுவலகங்களை பார்த்திருக்கலாம். ஆனால் நீங்களே கூட அந்த தொழிலை நடத்த முடியும் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம்! உண்மைதான். அதற்காக நீங்கள் UIDAI ஆல் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகு கடையை நடத்துவதற்காக உரிமம் உங்களுக்கு அளிக்கப்பட்டு, அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவை அனைத்தையும் பெற்ற பிறகு உங்களால் ஆதார் கார்டு சேவைகளை வழங்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 36

  போஸ்ட் ஆபிஸ் கிளை முதல் எஸ்பிஐ ஏடிஎம் வரை... குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் சுய வேலைவாய்ப்புகள்..!

  அஞ்சலக கிளை : அஞ்சலக கிளைக்கான அனுமதி பெறுவதன் மூலம் கிட்டத்தட்ட நீங்கள் அஞ்சலகம் எப்படி நடக்கிறதோ அதே போன்றதொரு அலுவலகத்தை நடத்த முடியும். இந்திய அஞ்சல் அலுவலகமானது இரண்டு விதமான கிளைகளுக்கான அனுமதியை வழங்குகிறது. ஒன்று நீங்கள் ஒரு கடை அல்லது அலுவலகத்தை நடத்துவது மற்றொன்று அஞ்சல் அதிகாரிக்கான உரிமத்தை பெறுவது. இதற்கான கட்டணம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும்தான். இதை செலுத்தி நீங்கள் அனுமதியை பெற்ற பிறகு, உங்களுக்கு கிடைக்கும் தரகு கட்டணங்களில் மூலம் லாபம் ஏற்ற முடியும்.

  MORE
  GALLERIES

 • 46

  போஸ்ட் ஆபிஸ் கிளை முதல் எஸ்பிஐ ஏடிஎம் வரை... குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் சுய வேலைவாய்ப்புகள்..!

  IRCTC டிக்கெட் ஏஜென்ட் : IRCTC- யின் உதவியுடன் மாதத்திற்கு பல ஆயிரம் ரூபாய்களை உங்களால் ஈட்ட முடியும். அதற்காக நீங்கள் சில குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, அங்கீகாரம் பெற்ற டிக்கெட்டை ஏஜென்ட் ஆக முடியும். அதற்காக இணைய வசதியும் மற்றும் வங்கி கணக்கிலிருந்து கட்டணங்களை செலுத்தும் வசதியும் இருக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் புக் செய்து நீங்கள் வருமானத்தை ஈட்ட முடியும்.

  MORE
  GALLERIES

 • 56

  போஸ்ட் ஆபிஸ் கிளை முதல் எஸ்பிஐ ஏடிஎம் வரை... குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் சுய வேலைவாய்ப்புகள்..!

  SBI ATM கிளை : எஸ்பிஐ ஏடிஎம் கிளை நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு நீங்கள் பாதுகாப்பு அமைப்புத் தொகையாக 2 லட்சம் செலுத்த வேண்டி இருக்கும். அதன் பிறகு 3 லட்சம் வரை முதலீடு செய்த பிறகு உங்களுக்கான அனுமதி அளிக்கப்படும். எனவே ஒட்டுமொத்தமாக நீங்கள் 5 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். நிறுவனத்தைப் பொறுத்து இந்த கட்டணம் மாறுபடலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  போஸ்ட் ஆபிஸ் கிளை முதல் எஸ்பிஐ ஏடிஎம் வரை... குறைந்த முதலீட்டில் நிறைவான லாபம் தரும் சுய வேலைவாய்ப்புகள்..!

  அமுல் கிளைகள் : அமுல் நிறுவனம் இரண்டு விதமான கிளைகளுக்கான அனுமதியை வழங்குகிறது. ஒன்று அமுல் ரயில்வே பார்லர் மற்றொன்று அமுல் ஐஸ் கிரீம் பார்லர் ஆகும். அமுல் ரயில்வே பார்லரை நடத்துவதற்கு முதலீடாக நீங்கள் 2 லட்சம் ரூபாய் முதலில் செலுத்த வேண்டும். அமுல் ஐஸ்கிரீம் பார்லருக்கான அனுமதியை பெற நீங்கள் விரும்பினால் 5 லட்சம் ரூபாய் முதலீடாக செலுத்த வேண்டியது இருக்கும். மேலும் திருப்பி அளிக்கப்படாத பாதுகாப்பு தொகையாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலுத்த வேண்டி வரலாம்.

  MORE
  GALLERIES