100 Minus Age rule எவ்வாறு செயல்படுகிறது.? : இந்த விதி ஒரு எளிமையான கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவருக்கு Stockக்கில் எவ்வளவு முதலீடு செய்வது என்பது பற்றி குழப்பம் இருந்தால், அவர் 100-லிருந்து தனது வயதை கழித்து கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் எண்ணிற்கு ஏற்ற தொகையை முதலீடு செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு முதலீட்டாளரின் வயது 30 என்று வைத்து கொள்வோம். அவர் தனது வயதை 100-லிருந்து கழித்தால் மீதி 70 வரும் அல்லவா.! இப்போது அவர் தனது போர்ட்ஃபோலியோவில் 70% பணத்தை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஸ்டாக்ஸ் போன்ற Equities-களில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள பணத்தை பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.
இந்த விதி எவ்வாறு பயனளிக்கிறது ? : இந்த ரூல் ஒரு தனிநபரின் சாத்தியமான ரிஸ்க் எடுக்கும் விருப்பத்தின் அடிப்படையிலானது. சில முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் எடுக்க விரும்புவார்கள் மற்றும் அவர்கள் இளமையானவர்கள் என்றால் தங்கள் முதலீடுகள் முதிர்ச்சியடைவதை பார்க்க அவர்களுக்கு நீண்ட நேரமும் இருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் தங்கள் வருமானத்தில் அதிகமான பணத்தை ஈக்விட்டிகளில் முதலீடு செய்து நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை பெறலாம் என்பதாகும்.
பொதுவாக வயதான முதலீட்டாளர்கள் சந்தை அபாயங்களைக் காட்டிலும் நிலையான மற்றும் வழக்கமான வருமானம் தங்காளுக்கு கிடைக்க வேண்டும் என்பதையே விரும்புவார்கள். எனவே இந்த ரூல் ஒரு தனிநபரின் வயதுக்கு ஏற்ப பலதரப்பட்ட போர்ட்ஃபோலியோவை ஊக்குவிக்கிறது. மேலும் இந்த விதியின் கீழ் உங்களது சேமிப்பு பல துறைகளில் திறம்பட ஒதுக்கப்பட்டு, மிகவும் சீரான போர்ட்ஃபோலியோ உருவாக்கப்படும்.
மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் : உங்கள் முதலீட்டில் இந்த விதியை பின்பற்றத் தொடங்கும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விதி தற்போதைய மார்க்கெட் கண்டிஷன்ஸ், ஒரு தனிநபரின் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதற்கான சகிப்புத்தன்மை மற்றும் குறிப்பிட்ட பங்குகளின் செயல்திறன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொள்ளாது.
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப விதியை மாற்றி கொள்ளலாம் மற்றும் உங்கள் சொந்த இலக்குகள், ரிஸ்க் எடுப்பதற்கான விருப்பம் மற்றும் தற்போதைய சந்தை நிலைமைகளை கணக்கில் எடுத்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் பணத்தை சிறப்பான முறையில் முதலீடு செய்ய விரும்பினால் இந்த விதி ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும். சிறந்த முடிவுகளைப் பெற, உங்கள் தேவைகள், நிதி இலக்குகள் மற்றும் தற்போதைய சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப இந்த விதியை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.