சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அத்தியவாசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். தி.நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை உணவு வழங்கினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியவாசிய உணவு பொருட்களையும் நிவாரணமாக வழங்கினார். துறைமுகம் சட்டமன்ற தொகுதியிலும் பாஜக இளைஞரணி சார்பில் 2000-க்கும் மேற்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் உணவு வழங்கப்பட்டது. துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் மக்களுக்கு பாஜக நிவாரணம்