முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. MT-03 மற்றும் R3 பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!

பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. MT-03 மற்றும் R3 பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் யமஹா MT-03 மற்றும் R3 இன் எதிர்ப்பார்க்கப்படும் விலை, விவரக்குறிப்புகள், மற்றும் அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் விவரமாகப் பார்ப்போம்.

  • 16

    பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. MT-03 மற்றும் R3 பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!

    சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு டீலர் கூட்டத்தில் யமஹா அதன் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களான R3, MT-03, R7, MT-07, மற்றும் MT-09 காட்சிப்படுத்தியது. பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, யமஹா தனது MT-03 மற்றும் R3 மோட்டார்சைக்கிள்களை விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. MT-03 மற்றும் R3 பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!

    இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் யமஹாவின் இந்த சூப்பர் பைக்குகளின் எதிர்ப்பார்க்கப்படும் விலை, விவரக்குறிப்புகள், அம்சங்கள் குறித்து விவரமாகப் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 36

    பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. MT-03 மற்றும் R3 பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!

    யமஹா MT-03 மற்றும் R3: வடிவமைப்பு : யமஹா MT-03 மற்றும் R3 மோட்டார் சைக்கிள்களில் இரட்டை LED ஹெட் லேம்ப்கள் மற்றும் LED இண்டிகேட்டர்கள் இருக்கும். உபகரணங்களைப் பொறுத்த வரை, இரண்டு யமஹா பைக்குகளும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டேகோமீட்டர், ட்ரிப் மீட்டர், எரிபொருள் நிலை ரீடிங் மற்றும் கியர் நிலை இண்டிகேட்டர் போன்ற தகவல்களைக் காட்டும் எல்சிடியைக் கொண்டிருக்கும். மஸ்குலர் எரிபொருள் டேங்க் உடைய யமஹா MT-03 மற்றும் யமஹா R3 ஆகிய இரண்டுமே உலகளாவிய அம்சங்கள் கொண்டுள்ள மாடல்களை ஒத்து இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 46

    பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. MT-03 மற்றும் R3 பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!

    யமஹா MT-03 மற்றும் R3 இன்ஜின் : உலகளாவிய அம்சங்கள் கொண்டுள்ள யமஹா MT-03 மற்றும் யமஹா R3 ஆகிய இரண்டு பைக்குகளும் 41.4 bhp இன் உச்ச ஆற்றல் மற்றும் அதிகபட்ச முறுக்குவிசை 29.6 Nm கொடுக்கக் கூடிய ஒரு 321சிசி லிக்விட்-கூல்டு ட்வின்-சிலிண்டர் இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் யமஹா MT-03 மற்றும் R3 ஆகிய இரண்டு பைக்குகளும் ஒரே அமைப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. MT-03 மற்றும் R3 பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!

    சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் : சஸ்பென்ஷன் டியூட்டி ஆனது 130 மிமீ பயணத்துடன் KYB தலைகீழான முன் ஃபோர்க்குகள் மற்றும் 125 மிமீ பயணத்துடன் பின்புற மோனோ-ஷாக் மூலம் கையாளப்படுகின்றன. பிரேக்கிங்கிற்காக, இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 298 மிமீ முன்புற டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குகள், டூயல்-சேனல் ஏபிஎஸ் ஆகியவை உள்ளன.

    MORE
    GALLERIES

  • 66

    பைக் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. MT-03 மற்றும் R3 பைக்குகளை அறிமுகம் செய்யும் யமஹா!

    எதிர்பார்க்கப்படும் விலை : யமஹா MT-03 இன் அறிமுக விலை (எக்ஸ் ஷோரூம்) கிட்டத்தட்ட ரூ. 2.95 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே போல், இந்தியாவில் யமஹா R3 இன் அறிமுக விலை (எக்ஸ் ஷோரூம்) கிட்டத்தட்ட ரூ. 3.16 லட்சமாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    MORE
    GALLERIES