இருசக்கர வாகன சந்தையில் முன்னணியில் உள்ள யமஹா நிறுவனம் பண்டிகை காலத்தை ஒட்டி தனது ஸ்கூட்டருக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.4 ஆயிரம் வரை கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2/ 6
ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யமஹா நிறுவனம் இருசக்கர வாகன தயாரிப்பில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் தமிழகத்தில் யமஹா தொழிற்சாலை உள்ளன.
3/ 6
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக வரவுள்ள நிலையில், யமஹா இந்தியா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மாடல்களுக்கான கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளன. கேஷ் பேக், நிதியுதவி சலுகைகள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.
4/ 6
இந்த மாதத்தின் இறுதிவரை ( 31 அக்டோபர், 2021) வரை இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யமஹா அறிவித்துள்ளது,
5/ 6
அதன்படி, யமஹா நிறுவனத்தின் 125 சிசி பிரிவில் உள்ள ஸ்கூட்டர்களை வாங்கும்போது ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 31 அக்டோபர் ‘2021 வரை இந்த சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6/ 6
ஃபாசினோ 125 ஃபை (ஹைப்ரிட் + ஹைப்ரிட் அல்லாதது), ரே இசட்ஆர் 125 மற்றும் ரே இசட்ஆர், ஸ்ட்ரீட் ரேலி 125 (ஹைப்ரிட் + ஹைப்ரிட் அல்லாதது) ஆகியவை இதில் அடங்கும்.