புளூடூத் கனெக்டிவிட்டி வசதி ஆப்ஷனலாக இந்த பைக்கில் கிடைக்கிறது, யமஹாவின் Y-Connect ஆப் மூலம் ஸ்மார்ட் போனை பைக்குடன் கனெக்ட் செய்து இந்த பைக் குறித்த என்னற்ற தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக மோட்டார்சைக்கிள் எங்கு பார்க்கிங் செய்யப்பட்டுள்ளது, ரைடு ஹிஸ்டரி, பியூயல் கன்ஸ்சம்ப்ஷன் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். இதில் நேவிகேஷன் வசதி, கொடுக்கப்படாதது ஒரு மைனஸாக பார்க்கப்படுகிறது.
ஸ்போர்டி ஃபியூயல் டேங்க், 17 இஞ்ச் அலாய் வீல்கள், பிளாக் பேட்டன் டியூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றிருப்பது நல்ல ரோட் கிரிப்பை வழங்குவதாகவும் கார்னரிங் செய்வதற்கு ஏற்றவகையிலும் உள்ளது. முகப்பில் டெலஸ்கோபிக் மற்றும் ரியரில் 7 ஸ்டெப் அட்ஜஸபிள் மோனோ ஷாக் அப்சார்பர் போன்றவை பைக்கின் முக்கியமான அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
இந்த பைக் அதிகபட்சமாக லிட்டருக்கு 45 முதல் 50 கிமீ மைலேஜ் தரும். இந்த பைக்கை குறைந்த வேகத்தில் குரூஸ் செய்வது அலாதியான அனுபவமாக இருந்தது. மேலும் இந்த பைக்கின் இஞ்சின் சப்தம் அதிக இரைச்சல் இல்லாமல் ஸ்மூத்தாக இருப்பது பயண அனுபவத்தை இனிமையாக்குகிறது. யமஹா எனும் போதே இதன் ஹேண்ட்லிங், பெர்ஃபார்மன்ஸை பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை. லாங் ரைட் மற்றும் ஷார்ட் ரைட்களுக்கு ஏற்ற வகையில் இந்த பைக்கின் இஞ்சின் பெர்ஃபார்மன்ஸ் இருந்தது.