உலக அளவில் பெட்ரோல் மற்றம் டீசல் விலை உயர்வு வாகனங்களுக்கான மாற்று எரிபொருளை கண்டுபிடிக்கும் வேகத்தை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே, சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அதன் புழக்கம் அதிகரிக்கவில்லை. மிகவும் சொற்பமாகத் தான் சிஎன்ஜி எஞ்சின் பொருத்தப்பட்ட காாகள் தயாரிக்கப்படுகின்றன.
மும்பை, டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் கார்கள் மட்டுமல்ல, பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் கூட சிஎன்ஜியால் இயக்கப்படுகின்றன. ஆனால் நாடு முழுவதும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு மிகவும் குறைவு. ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள சிஎன்ஜி வாகனங்களும் மிகவும் பேசிக் மாடலில், எந்த விதமான அப்டேட் மற்றும் வசதிகள் இல்லாமல் தயராரிக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது முன்னனி நிறுவனங்கள் மேம்பட்ட சொகுசு கார்களை சிஎன்ஜி எஞ்சினுடன் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். அப்படி தயாரிக்கப்பட்ட ஐந்து கார்களைப் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
மாருதி சுசுகி XL6 : நவீன வசதிகளுடன் மாருதி சுசுகி நிறுவனம் XL6 என்ற பெயரில் சிஎன்ஜி காரை தயாரித்துள்ளது. ஆட்டேமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் இந்த காரில் உள்ளது. அதோடு, ஸ்டைலிசான டேஸ்போர்டில் 7 இன்ச் அளவிற்கு நவீன டிஸ்பிளே உள்ளது. 16 இன்ச் அசத்தலான அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறம் மட்டுமல்லாமல் நடுவிலும் ஏசி ஸ்பிளிட் உள்ளது. நவீன உட்புற வடிமைப்புடன் இந்த கார் சிஎன்ஜி எஞ்சினுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. XL6-ன் விலை 12 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மாருதி சுசுகி பெலினோ : பிரிமியம் வகை காரான பெலினோவையும் சிஎன்ஜி எஞ்சினுடன் தயாரித்திருக்கிறது மாருதி சுசுகி நிறுவனம். டெல்டா, ஜெட்டா என இரண்டு வேரியண்ட்களில் பெலினோ சிஎன்ஜி தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பெலினோவைப் போலவே அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது பெலினோ சிஎன்ஜி. எல்இடி புரோஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டார்மாட் போனை இணைக்கும் வசதி, ஸ்டியரிங் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி மற்றும் 6 ஏர் பேக்குகடள் தாயரிக்கப்பட்டிருக்கும் பெலினோ சிஎன்ஜி கார் 8 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயில் இருந்து கிடைக்கிறது.
டொயோட்டா கிளான்சா : சிஎன்ஜி எஞ்சின் பொருத்தப்பட் சொகுசு கார்களை டெயோட்டா நிறுவனமும் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் டொயோட்டாவின் சமீபத்திய வரவான கிளான்சாவும் சிஎன்ஜி எஞ்சினுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் பெலினோவில் என்ன அம்சங்கள் எல்லாம் இருக்கின்றனவோ, அனைத்து வசதிகளும் கிளான்சாவிலும் இருக்கின்றன. இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் கிளான்சா சிஎன்ஜி பெலினோவை விட கொஞ்சம் வில கூடுதலாக இருக்கும். கிளான்சா 8 லட்சத்து 43 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் : புதிய வரவிற்கான பட்டியல் இடப்பட்டால் அந்தப் பட்டியல் ஹூண்டாய் நிறுவனம் இல்லாமல் முடிவடையாது. ஆம்.. சிஎன்ஜி எஞ்சின் கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனமும் இணைந்துள்ளது. ஐ10 நியோஸ் சீரிஸ் கார்களை சிஎன்ஜி எஞ்சினுடனும் தயாரிக்கிறது ஹூண்டாய் நிறுவனம். மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்டா என மூன்று மாடல்களில் இந்த கார் கிடைக்கிறது. இந்த கார்களின் விலை 7 லட்சத்து 16 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.
டாடா டியாகோ : இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா நிறுவனம் தனது சிஎன்ஜி டியாகோ காரை ஏற்கனவே கடந்த மாதமே சந்தைப்படுத்தி விட்டது. 1.2 லிட்டர் திறன் கொண்ட டியாகோ கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்தது. தற்போது அதன் விலை 7 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நவீன, மேம்பட்ட அமச்ஙகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது டாடா டியாகோ சிஎன்ஜி கார்கள்