2019-ம் ஆண்டில் புதிய வாகனப் பாதுகாப்பு அம்சங்களுடன் களம் இறங்கும் எக்ஸ்.யூ.வி-களுக்குப் போட்டியாக வருகிறது மஹிந்திரா XUV300. மஹிந்திரா XUV300-ல் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் இல்லை. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு வகை என்ஜின் ரகங்கள் உள்ளன. மஹிந்திரா XUV300 விலை 8 முதல் 12 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14-ம் தேதி முதல் மஹிந்திரா XUV300 விற்பனை தொடங்குகிறது. தற்போது நடைபெற்று வரும் புக்கிங்-ல் வாடிக்கையாளர்கள் 20 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அமைக்கப்பட்டுள்ளது. டீசல் ரகத்தில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். ஸ்டியரிங் மோட் கூடுதல் ப்ளஸ் ஆக இருக்குமெனக் கூறப்படுகிறது.