மாருதி சுஸூகி நிறுவனம் இந்த ஏப்ரல் 2022க்கான தனது கார் ஆஃபர்களை அறிவித்துள்ளது மற்றும் இதன் கீழ் ரூ. 31,000 வரையிலான கவர்ச்சிகரமான பலன்களையும் வழங்குகிறது. இதன் கீழ் கிடைக்கும் நன்மைகளானது - வேகன் ஆர், எஸ்-பிரஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிஸையர் மற்றும் பல மாடல்களின் மீது - தள்ளுபடி விலைகள், கார்ப்ரேட் நன்மைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் போன்ற வடிவங்களில் அணுக கிடைக்கும்.
மாருதி சுஸூகி வேகன் ஆர் மீது ரூ. 31,000 வரை சேமிக்கலாம் : சமீபத்தில் டூயல்ஜெட் இன்ஜின்கள், புதிய அம்சங்கள் மற்றும் பல வண்ண விருப்பங்களுடன் புதுப்பிக்கப்பட்ட மாருதி சுஸுகி வேகன் ஆர் ஆனது 1.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல் ஆகிய இரண்டு இன்ஜின் விருப்பங்களை கொண்டுள்ளது. மேலும் இவை இரண்டுமே மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் விருப்பங்களையும் பெறுகின்றன. இதில் 1.0-லிட்டர் வகைகள் ரூ.31,000 வரையிலான நன்மைகளுடன் வாங்க கிடைக்கின்றன, அதே சமயம் 1.2-லிட்டர் வகைகள் ரூ.26,000 வரையிலான நன்மைகளுடன் வாங்க கிடைக்கின்றன.
மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ மீது ரூ.31,000 வரை சேமிக்கலாம் : எஸ்-பிரஸ்ஸோவின் அனைத்து மேனுவல் வகைகளும் ரூ. 31,000 வரையிலான நன்மைகளுடன் வாங்க கிடைக்கின்றன, இதில் கேஷ் டிஸ்கவுண்ட், கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவைகளும் அடங்கும். எஸ்-பிரஸ்ஸோவின் ஏஎம்டி வகைகள் ரூ.16,000 வரையிலான நன்மைகளை வழங்குகிறது.
மாருதி சுஸூகி ஆல்டோ 800 மீது ரூ. 24,000 வரை சேமிக்கலாம் : தற்போதைய தலைமுறை மாருதி சுஸுகி ஆல்டோ சுமார் பத்தாண்டுகள் பழமையானது, ஆனால் இன்னமும் விற்பனையில் பட்டையை கிளப்புகிறது. தற்போது ஆல்டோவை வாங்க திட்டமிடுபவர்கள் ரூ.24,000 வரையிலான நன்மைகளை பெறலாம். இருப்பினும் பேஸிக் அஎஸ்டிடி மாடலானது வெறும் ரூ.11,000 வரையிலான நன்மைகளை மட்டுமே கொண்டுள்ளது.
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மீது ரூ.22,000 வரை சேமிக்கலாம்: மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஆல் நியூ பிரெஸ்ஸாவை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் நிலையில், தற்போதைய மாடலை ரூ.22,000 வரையிலான நன்மைகளுடன் பட்டியலிட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிட்ட தள்ளுபடிகள் நகரத்திற்கு நகரம் மாறுபடும் மற்றும் யூனிட்களின் கிடைக்கும் தன்மையை பொறுத்தது. குறிப்பிட்ட கார்களின் மீதான சரியான தள்ளுபடி விவரங்களை பற்றி அறிய உங்களின் உள்ளூர் டீலரை அணுகவும்.