முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » தீயாய் நடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி..! கலக்கும் TVS...

தீயாய் நடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி..! கலக்கும் TVS...

TVS iCube மற்றும் TVS iCube S வேரியன்ட்களில் 3.4 kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ ஆன்-ரோடு தூரத்தை இது வழங்குகிறது.

 • 16

  தீயாய் நடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி..! கலக்கும் TVS...

  எலெக்ட்ரிக் டூ வீலர் செக்மென்ட்டில் டிவிஎஸ் மோட்டார் முன்னணி பிராண்டாக வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான i Qube மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரின் ரைடிங் பர்ஃபாமென்ஸ் மற்றும் டியூரபிலிட்டி சிறப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக iCube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரால் குறுகிய காலத்தில் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற முடிந்தது. இந்த நிலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இப்போது 10 நாட்களில் 10 நகரங்களில் 1,000 யூனிட்கள் மாரத்தான் ( 10 (days) X 10 (cities) X 1,000 (vehicle deliveries) Marathon ) என்ற மெகா டெலிவரியை அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  தீயாய் நடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி..! கலக்கும் TVS...

  இந்த 10X 10 X 1,000 டெலிவரி மாரத்தானை கிக் ஸ்டார்ட் செய்யும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் சமீபத்தில், டிவிஎஸ் நிறுவனம் 100 TVS iCube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புதுடெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. TVS iQube-ஆனது 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 1,00,000 யூனிட் விற்பனை மைல்கல்லைப் பதிவு செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  தீயாய் நடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி..! கலக்கும் TVS...

  இதனை கொண்டாடும் விதமாக புதுடெல்லியில் 100 TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வழங்கி நடந்த மெகா டெலிவரி நிகழ்ச்சியில் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். கூடுதலாக TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெற்றிகரமாக AIS156 Phase 2-விற்கு மாறியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே சிறப்பான இந்த தருணத்தில் EV பயணத்தை நோக்கி, TVS மோட்டார் நிறுவனம் சில அடிப்படைக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 46

  தீயாய் நடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி..! கலக்கும் TVS...

  வாடிக்கையாளர்களுக்கு ரேஞ்ச், கனெக்டட் கேப்பபிலிட்டிஸ், சார்ஜர்கள் மற்றும் வண்ணங்களுக்கான தேர்வின் சக்தியை வழங்குவது, சமீபத்திய விதிமுறைகள் மற்றும் ஒட்டுமொத்த கொள்முதல் அனுபவத்தை பின்பற்றி வாகன பாதுகாப்பை உறுதி செய்து மன அமைதியை கொடுப்பது, TVS iQube-ஐ இயக்குவதில் தொந்தரவற்ற எளிமையான அனுபவத்தை கொடுப்பது உள்ளிட்டவை இதில் அடக்கம். தற்போது இந்த ஸ்கூட்டர் தற்போது இந்தியாவின் 140 நகரங்களில் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 56

  தீயாய் நடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி..! கலக்கும் TVS...

  TVS iCube மற்றும் TVS iCube S வேரியன்ட்களில் 3.4 kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ ஆன்-ரோடு வரம்பை இது வழங்குகிறது. TVS iCube-ன் சில முக்கிய அம்சங்களில் 7.0 இன்ச் TFT டிஸ்ப்ளே, ரிவர்ஸ் பார்க்கிங், HMI கன்ட்ரோல் போன்றவை அடங்கும். மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஆன்டி-தெஃப்ட் அலாரம், ஜியோஃபென்சிங் மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட SmartXonnect இணைக்கப்பட்ட டெக்னலாஜியும் கொடுக்கப்பட்டுள்ளது. .

  MORE
  GALLERIES

 • 66

  தீயாய் நடக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி..! கலக்கும் TVS...

  TVS iCube மற்றும் iCube S வேரியன்ட்ஸ்களில் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது, இது அதிகபட்சமாக 6.0 bhp ஆற்றலையும் 140 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேலும் TVS iQube Electric சீரிஸ் 7 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதற்கிடையே TVS மோட்டார் நிறுவனம் அதன் போட்டியாளரான ராயல் என்ஃபீல்டுக்கு கடும் போட்டியை அளிக்க புதிய 600-750cc மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES