முகப்பு » புகைப்பட செய்தி » டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? - முழு விவரம்

டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? - முழு விவரம்

டிவிஎஸ் ரெய்டர் செக்மெண்டிலேயே சிறந்த ஆக்ஸிலரேஷன் மற்றும் டார்க் திறன் கொண்டதாக வெளிவந்துள்ளது. இதில் டிஃப்டி இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் ஆப்ஷனலாக இடம்பெற்றுள்ளது. ஆனால் இதெல்லாம் டிவிஎஸ் ரெய்டரை, ஹோண்டா எஸ்பி 125 பைக்கை விட சிறப்பானதாக ஆக்குமா?

  • 16

    டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? - முழு விவரம்

    இந்தியாவின் மோட்டார் சைக்கிள் செக்மெண்ட்டில் சிறந்து விளங்குவது கம்யூட்டர் செக்மெண்ட் பைக்குகளே. நல்ல மைலேஜ், இலகுவான ஓட்டும் திறன், ஹேண்ட்லிங், கவர்ச்சிகர விலை போன்றவை காரணமாக இவை விற்பனையில் சிறந்து விளங்குகின்றன. அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம், விலையை குறைவாக வைத்திருக்கும் வகையில் அடிப்படை அம்சங்கள் மட்டுமே இதில் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் சில மாடல்கள் ஸ்போர்டி அம்சத்தில் சில கவர்ச்சிகரமான அம்சங்களை கொண்டிருக்கும், அவற்றில் ஒன்று தான் டிவிஎஸ் ரைடர். நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிவிஎஸ் ரெய்டர் பைக் 77,500 ரூபாய் (எக்ஸ் ஷோரூம் டெல்லி) என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 26

    டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? - முழு விவரம்

    டிவிஎஸ் ரெய்டரில் கலர் எல்.சி.டி டிஸ்பிளே ஸ்டேண்டர்ட் அம்சமாக கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேயில் ஸ்பீடு, ட்ரிப் மீட்டர், கியர் ஷிப்ட் இண்டிகேட்டர், டாகோமீட்டர், பியூயல் எக்கனாமி, வேகம், ஹெல்மெட் இண்டிகேட்டர், ஓடோமீட்டர், பியூயல் கேஜ் உள்ளிட்ட அம்சங்களை கிடைக்கின்றன. இந்த பைக்கில் எகானமி மற்றும் பவர் என இரண்டு டிரைவிங் மோட்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கின் சைடு ஸ்டேண்ட் போட்டிருந்தால் இஞ்சின் ஆன் ஆகாது என்பது பாதுகாப்புமிக்க அம்சமாகும்.

    MORE
    GALLERIES

  • 36

    டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? - முழு விவரம்

    இதுதவிர ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய 5 இஞ்ச் டிஎஃப்டி கிளஸ்டர் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் கால்/எஸ்எம்எஸ் போன்றவற்றை திரையில் அனுகுவது, வாய்ஸ் அசிஸ்டண்ட், நேவிகேஷன் போன்ற அம்சங்கள் கிடைக்கிறது. மேலும் IntelliGO தொழில்நுட்பம் இருப்பதால் இஞ்சின் சப்தம் இல்லாமல் ஸ்டார்ட் ஆகும்.
    அதே நேரத்தில் ஹோண்டா எஸ்பி 125 பைக்கில் டிவிஎஸ் ரெய்டரில் தரப்பட்டிருக்கும் டிஎஃப்டி கிளஸ்டர் தவிர்த்து பிற அனைத்து அம்சங்களுமே கொடுக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 46

    டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? - முழு விவரம்

    கிரவுண்ட் கிளியரன்ஸ் - எடை:
    டிவிஎஸ் ரெய்டர் 180 எம்எம் கிரவுண்ட் கிளியரன்ஸ் உடனும் 123 கிலோ எடையுடனும் வந்துள்ளது.
    ஹோண்டா எஸ்பி 125 பைக் 160 எம்எம் கிரவுண்ட் கிளியரன்ஸ் உடனும் 117 கிலோ எடையுடனும் வந்துள்ளது.
    எஞ்சின்:
    டிவிஎஸ் ரெய்டர் பைக்கில் 124.8சிசி ஏர் கூல்டு எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11.55 பிஹெச்பி திறனையும், 11.2 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது.
    ஹோண்டா எஸ்பி பைக்கில் 123.9 சிசி ஏர் கூல்டு எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.72 பிஹெச்பி திறனையும், 10.9 என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? - முழு விவரம்

    சஸ்பென்ஷன் - பிரேக்கிங்:
    டிவிஎஸ் ரெய்டரில் 5 வகையில் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக்கூடிய கேஸ் சார்ஜூடு மோனோ ஷாக் டெலஸ்கோபிக் போர்க் சஸ்பென்ஷன் கிடைக்கிறது.
    முகப்பில் 240 எம்எம் பெடல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 130 எம்எம் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.
    ஹோண்டா எஸ்பி 125 பைக்கில் 5 வகையில் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக்கூடிய கேஸ் சார்ஜூடு டிவின் ஷாக் டெலஸ்கோபிக் போர்க் சஸ்பென்ஷன் கிடைக்கிறது.
    இருபக்கங்களில் 130 எம்எம் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது. 240 எம்எம் முகப்பு டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? - முழு விவரம்

    விலை:
    டிவிஎஸ் ரெடய்டர் (டிஸ்க்) - ரூ.77,500
    ஹோண்டா எஸ்.பி 125 (டிரம்) - ரூ.78,381
    ஹோண்டா எஸ்.பி 125 (டிஸ்க்) - ரூ.82,677
    கூடுதலாக பணம் செலுத்தி ரெய்டரில் டிஎப்டி டிஸ்பிளே, ஸ்மார்ட் கனெக்டிவிட்டி ஆப்ஷனை பெற்றுக்கொள்ள முடியும்.

    MORE
    GALLERIES