முகப்பு » புகைப்பட செய்தி » ஆட்டோமொபைல் » ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

ஸ்ப்ளெண்டர் பிளஸ் மாடல் பைக் வாங்க நினைப்போர், அதனுடைய போட்டி மாடல்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 • 19

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  ஹீரோ ஹோண்டா நிறுவனம் 1994-ல் முதல் தலைமுறை ஸ்ப்ளெண்டர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. 90களில் சிறந்த மாடலாக விளங்கிய ஹீரோ ஹோண்டா சிடி 100 மாடலின் வழித்தோன்றல் தான் இந்த ஸ்ப்ளெண்டர். கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு 2004ம் ஆண்டு ஸ்ப்ளெண்டர் பிளஸ் என்ற மாடலை அந்நிறுவனம் வெளியிட்டது. 2017ம் ஆண்டு வரையில் இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகும் இருசக்கர வாகனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது இந்த மாடல். பின்னர் ஆக்டிவா அந்த இடத்தை பிடித்தது. எனினும் தற்போதும் இந்தியாவில் விற்பனையில் நம்பர் 1 இடத்தை பெற்றிருப்பது ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளே.

  MORE
  GALLERIES

 • 29

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  பல ஆண்டுகளாக இந்த பைக் பலவாறு மெருகேற்றப்பட்டு வந்த போதிலும் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இருந்து வந்த ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் செப்டம்பர் மாதத்தில் இந்த பைக்குகளில் விலையை கணிசமாக அதிகரித்துள்ளது. 64,850 - 77,600 ரூபாய் என்ற விலையில் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகள் தற்போது கிடைக்கிறது. இதனிடையே ஸ்ப்ளெண்டர் பிளஸ் மாடல் பைக் வாங்க நினைப்போர், அதனுடைய போட்டி மாடல்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 39

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  டிவிஎஸ் நிறுவனத்தின் ரேடியான் மாடல் கம்யூட்டர் செக்மெண்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பைக்கில் இருக்கக்கூடிய 110 சிசி எஞ்சின், அதிகபட்சமாக 8 பிஹெச்பி ஆற்றலையும், 9 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. 4 வேக கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள ட்வின் பாட் இன்ஸ்ட்ருமெண்ட் பேனலில் பைக்கின் வேகம், ஃபியூல் உள்ளிட்ட தகவல்களை காணலாம். இந்த பைக்கில் சைட் ஸ்டேண்ட் இண்டிகேட்டர் இடம்பெற்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 49

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  சைடு ஸ்டேண்ட் போடப்பட்டிருந்தால் அது ஓட்டுனரை எச்சரிக்கும் பீப் ஒலியை எழுப்புகிறது. இந்த பைக்கில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் 5 வகையில் மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. ட்ரம் பிரேக் ஸ்டேண்டர் அம்சமாகவும், டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகவும் கிடைக்கிறது. இந்த பைக் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் 59992 முதல் 69782 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 59

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா நீண்ட காலமாக கம்யூட்டர் செக்மெண்டில் தனது நிலைப்பாட்டினை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. இந்த பைக்கின் ஸ்டைல் கவர்ச்சிகரமானதாக உள்ளது. மேலும் இந்த பைக்கில் எல்.ஈ.டி டி.ஆர்.எல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இருக்கக்கூடிய 115 சிசி எஞ்சின், அதிகபட்சமாக 8 பிஹெச்பி ஆற்றலையும், 10 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. ஸ்மூத்தான ரைடுக்காக இந்த பைக்கில் 5 வேக கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 69

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  பிளாட்டினா 110 பைக் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் 62,234 முதல் 66,739 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 79

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  சிடி 110 ட்ரீம் பைக்கில் பவர்ஃபுல் 109.5 சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் அதிகபட்சமாக 9 பிஹெச்பி ஆற்றலையும், 9 என்.எம் டார்க் திறனையும் பெற முடிகிறது, இதில் இடம்பெற்றுள்ள இன்ஸ்ட்ருமெண்ட் பேனல் மூலம் ஓடோமீட்டர், ஃபியுயல் கேஜ் போன்ற தகவல்களை பார்க்க முடியும். சிடி 110 ட்ரீம் பைக் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் 65,930 முதல் 67,430 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 89

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  நீண்ட காலமாக கம்யூட்டர் பைக் செக்மெண்டில் நிலைத்திருக்ககூடிய மாடல்களில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலுக்கு முக்கிய இடமுண்டு. கச்சிதமான வடிவமைப்பு, ஸ்டைல், ஃபெர்பார்மன்ஸ் என ஒருங்கிணைந்த பைக்காக இது வெளிவருகிறது. எல்.ஈ.டி ஹெட்லாம்ப், செமி - டிஜிட்டர் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் இதன் சிறப்பம்சங்கள். இந்த பைக்கில் இருக்கக்கூடிய 110 சிசி எஞ்சின், அதிகபட்சமாக 8 பிஹெச்பி ஆற்றலையும், 9 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. 4 வேக கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது. ஸ்டார் சிட்டி பிளஸ் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் 68,475 முதல் 70,975 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES

 • 99

  ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?

  ஸ்மார்டான ஸ்ப்ளெண்டர் என்றும் இதனை அழைக்க முடியும். எஞ்சின் கட் ஆப், இன்ஸ்டண்ட் பிக் அப், மலையேற்றத்தில் சிரமமின்றி ஏறுவது, அனைத்து வித காலநிலைகளிலும் சுலபமாக ஸ்டார்ட் ஆவது போன்ற அம்சங்களை உள்ளடக்கியது இந்த பைக். இதற்கென பிரத்யேக எக்ஸ் சென்ஸ் தொழில்நுட்பம், ஐ-ஸ்மார்ட் போன்ற அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் இருக்கக்கூடிய 113.2 சிசி எஞ்சின், அதிகபட்சமாக 9 பிஹெச்பி ஆற்றலையும், 10 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. 4 வேக கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கிறது. ஸ்ப்ளெண்டர் ஐ-ஸ்மார்ட் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் 68,650 முதல் 71,350 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது.

  MORE
  GALLERIES