இந்தியாவில் பண்டிகை காலங்கள் வரிசையாக வர இருப்பதால் அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இருசக்கர வாகனங்களும் சந்தையில் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ‘ஜூபிடர் 125’ இந்திய வாடிக்கையாளர்கள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தை பற்றிய விவரங்களை இங்கு காண்போம்.,
இன்டெல்லிகோ தொழில்நுட்பம் : டிவிஎஸ் நிறுவனம் ஜுபிட்டர் 125க்கு ‘இன்டெல்லிகோ’ தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கின் போது நாம் காத்திருக்க வேண்டும். அப்போது இது தானாகவே வண்டியை ஆப் செய்துவிடும். 2 நொடிக்கும் மேலாக வண்டி நிற்கும் போது , தானாகவே ஆப் ஆகிவிடும். எரிபொருள் சிக்கனத்தை கவனத்தில் கொண்டே இந்த ஸ்கூட்டர் தயாரித்திருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோலின் விலை உயர்ந்துகொண்டே வரும் இந்த சூழலில் இந்த தொழில்நுட்பம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
என்ஜின் : புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் 125 மாடலில் 124.8சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி. திறன், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புதிய ஜூப்பிட்டர் மாடலில் 12 இன்ச் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
எல்இடி டிஆர்எல்: பெரும்பாலும் ‘ஜூபிடர் 125’ எல்இடி டிஆர்எல் வசதியை கொண்டுள்ளது. மேலும் 32 லிட்டர் அன்டர் சீட் ஸ்டோரேஜ், முன்புறம் குளோவ் பாக்ஸ், யு.எஸ்.பி. சார்ஜர் வழங்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களின் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹோண்டா ஆக்டிவா 124, சுசுகி ஆக்செஸ் 125 மாடலுக்கும் போட்டியிடும் வகையில் இந்த ‘ஜூபிடர் 125’ இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். இந்த தீபாவளியில் நிச்சயம் இந்த வருடத்தின் சிறந்த ஸ்கூட்டராக “ஜூபிடர் 125” இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் துவக்க விலை ரூ. 73,400 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.